மேலும் அறிய

கரூரில் படைவீரர் கொடிநாள் நிதி சேகரிப்பு - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் 2022 ஆம் ஆண்டிற்கான நிதி சேகரிப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் உண்டியலில் நிதி செலுத்தி தொடங்கி வைத்தார்கள். 

படைவீரர்களுக்கான கொடி நாள் நிதி சேகரிப்பு

இந்த நாட்டை எல்லையில் பாதுகாத்து எங்கள் அனைவரையும் நிம்மதியாக உறங்க வைத்த முன்னாள் படைவீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முன்னாள் படைவீரர்களுக்கான கொடி நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்.த.பிரபு சங்கர் பேசினார்.

கரூரில் படைவீரர் கொடிநாள் நிதி சேகரிப்பு - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (07.12.2022) படைவீரர் கொடிநாள் 2022ஆம் ஆண்டிற்கான நிதி சேகரிப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் உண்டியலில் நிதி செலுத்தி தொடங்கி வைத்தார். 

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
 
நமது தாய் திருநாட்டின் பாதுகாப்பு பணிக்காக அரும்பணியாற்றிய முன்னாள் படைவீரர்கள், போரில் வீரமரணம் அடைந்த படைவீரர்கள், காயம் அடைந்த படைவீரர்கள் ஆகியோரின் தன்னலமற்ற சேவையை போற்றும் வகையில் நாடு முழுவதும் இன்று படைவீரர்கள் கொடிநாள் கொண்டாடப்படுகிறது. 

கரூரில் படைவீரர் கொடிநாள் நிதி சேகரிப்பு - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் இன்று முதல் கொடிநாள் நிதி சேகரிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் கொடிநாள் மிகச் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. நமது கரூர் மாவட்டத்தில் நம்முடைய நாட்டின் அனைவருக்காகவும் பாடுபட்டு இருக்கக்கூடிய அனைத்து இராணுவ வீரர்களுக்கும் மரியாதை அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொடிநாள் நிதியாக நமக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.91.67 இலட்சம் ஆகும். அதில் நாம் இலக்கைவிட அதிகமாக ரூ.92 இலட்சம் சேகரித்துள்ளோம். இதற்காக மேதகு ஆளுநர் அவர்கள் பாராட்டு தெரிவிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். கொடிநாள் வசூலை பொறுத்த வரையில் நடப்பு ஆண்டில் 2021-2022 இலக்கீடு ரூ.96.83 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை இரண்டு மடங்காக நிதி சேகரிக்க முயற்சி செய்யப்படும். 

இராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பாக இருப்பதால் நாம் அனைவரும் நிம்மதியாக உறங்குகிறோம். அந்த வகையில்  கரூர் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய ஒவ்வொரு முன்னாள் இராணுவத்தினர், முப்படையை சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும், தங்கள் குடும்பத்தார்களுக்கும் எந்தவிதமான கோரிக்கை இருந்தாலும், முன்னுரிமை அடிப்படையில் தனி கவனம் செலுத்தி மாவட்ட நிர்வாகம் உங்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கு துணையாக இருப்போம். இந்த கொடிநாள்  நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த முன்னாள் படைவீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
கரூரில் படைவீரர் கொடிநாள் நிதி சேகரிப்பு - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எம்.லியாகத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) திருமதி.பி.லட்சுமி, சமுக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சைபுதீன், முன்னாள் படைவீரர் நல அலுவலக நல அமைப்பாளர் திரு.மு.வீரபத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்.

கரூர் மாவட்ட அளவில் தேசியத் தொழிற் பலகுணர் சேர்க்கை முகாம் வருகிற 12-ஆம் தேதி நடைபெறுகிறது இதுகுறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. தேசிய தொழில் பழகுணர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கரூர் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் கரூர் வெண்ணமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டிசம்பர் 12ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

அரசு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வெற்றிகரமாக பயிற்சியை முடித்து இதனால் வரை தொழிற் பழகுணர் பயிற்சியை மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள் தங்களது கல்வி ஜாதி சான்றிதழ் பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆதார் அட்டை தேசிய மாநில தொழிற்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற் பழகுணர் சேர்க்கை முகாமில் பங்கேற்று, தொழில் பழகுனவர்களாக சேர்ந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற்பழகுநர்களின் வேட்புலத்தினை நிறைவு செய்திடும் வகையில், உரிய நிறுவன பதார்த்தைக்களுடன் இந்த முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற் பழகுணர்களை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களை அறியும் வகையில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் இரண்டாம் தளம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெண்ணைமலை கரூர் என்ற முகவரியில் நேரிலும் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு அறியலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Kasthuri:
Kasthuri: "நடிகை கஸ்தூரி மீது பாய்ந்தது வழக்கு" 4 பிரிவுகளில் FIR போட்ட போலீஸ்!
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்குPawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Kasthuri:
Kasthuri: "நடிகை கஸ்தூரி மீது பாய்ந்தது வழக்கு" 4 பிரிவுகளில் FIR போட்ட போலீஸ்!
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
Embed widget