மேலும் அறிய

Fire Accident : சென்னையில் மருந்து கிடங்கில் பயங்கர தீ விபத்து..! நடந்தது என்ன...?

சென்னை அசோக் நகரில் உள்ள மருந்து நிறுவனக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகரில் உள்ள மருந்து நிறுவனக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அசோக்நகர் 2 ஆவது அவென்யூவில் உள்ள தனியார் மருந்து நிறுவனக் கடையில் இன்று காலை புகை வெளியானதை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். தகவல் அறிந்ததும் அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முதல்கட்டமாக அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுப்பதற்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.  

இதையடுத்து, அவர்கள் தீயணைப்புப் படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசுகள் வெடிப்பதால் தீ விபத்து நேரிட வாய்ப்புள்ளதை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தயார் நிலையில் இருந்தனர்.

விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற தீயணைப்புப் படை வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 2 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஷட்டர் மூடியிருப்பதால் நிறுவனம் உள்ளே தீயை அணைக்க சற்று காலதாமதம் ஏற்பட்டது. மருந்து கிடங்கு என்பதால் புகை அதிகம் வெளியானது. அப்பகுதியில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. மருந்து நிறுவன கிடங்கில் இருந்த சில வாகனங்களும் தீக்கிரையாகியது. தீவிபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, செங்கல்பட்டு அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் கேஸ் குடோன் தீ விபத்து சில வாரங்களுக்கு முன் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவரின் மனைவி சாந்தி பெயரில் A.S.N.S பாரத் கேஸ் ஏஜென்சி நடைபெற்று வந்தது. இந்த கேஸ் குடோனில் கமர்ஷியல் சிலிண்டருக்கும் தொழிற்சாலை சிலிண்டர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில் அனுமதியின்றி கேஸ் நிரப்பும் பணியையும் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி இரவு 7 மணியளவில் கேஸ் சிலிண்டரை இறக்கும்போது தவறுதலாக கீழே விழுந்ததில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 80/90 சதவீதத்துக்கு மேல் படுகாயம் அடைந்த ஜீவானந்தம், சந்தியா, பூஜா, அருண், குணால் ஆகிய 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் 30/50 சதவீத தீக்காயங்களுடன் நிவேதா, சக்திவேல், சண்முகப்பிரியன், கோகுல், தமிழரசன், கிஷோர், வட மாநிலத்தை சேர்ந்த அமோத்குமார் ஆகிய 7 பேரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் சக்திவேல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் நிவேதா ஜீவானந்தம் சிகிச்சை பெற்று வருகிறார்.

செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இன்று பூஜா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கேஸ் குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பாக தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார்
மற்றும் கேஸ் குடோன் மேலாளர் மோகன்ராஜ் ஆகிய 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget