மேலும் அறிய

பெரியார் சிலை குறித்த சர்ச்சை பேச்சு: கனல் கண்ணனுக்கு நீதிமன்றக் காவல்!

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு: சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை இம்மாத 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில், சிறையில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு: சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை இம்மாத 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில், சிறையில்  வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்து முன்னணி பிரமுகரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன், பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக  பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டதில் இருந்து, தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று காலை பாண்டிச்சேரியில் வைத்து கைது செய்தனர்.

பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கனல் கண்ணனை நீதிபதி இம்மாதம் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில், சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் கனல் கண்ணனை காவல் துறையினர் புழல் சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைக்கவுள்ளனர்.  

கனல் கண்ணன் : 

சினிமா ஸ்டண்ட் மாஸ்டராக தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில்  பணியாற்றிய கனல் கண்ணன்,பல படங்களில் சண்டை காட்சிகளில் தோன்றி ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர். 1991 ஆம் ஆண்டு சேரன் பாண்டியன் படத்தில் அறிமுகமான அவர் 2017 ஆம் ஆண்டு கடைசியாக குருதிப்பூக்கள் என்ற படத்தில் ஸ்ட்ண்ட் மாஸ்டராக பணியாற்றியிருந்தார். இதற்கிடையில் சங்கரன்கோவில், சற்றுமுன் கிடைத்த தகவல் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடத்துள்ளார். 

இதன்பின்னர் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த இந்து முன்னணி நிறுவனத் தலைவரான ராமகோபாலன் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். 

நடந்தது என்ன.. ? 

தொடர்ந்து இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்ட கனல் கண்ணன் அந்த அமைப்பின் நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்று பேசி வருகிறார். அந்த வகையில், இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவையொட்டி சென்னை, மதுரவாயலில் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியிருந்தார்.

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல் கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைபடுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாலேயே அதை இடிக்க வேண்டுமென பேசியதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கனல் கண்ணன் கேட்ட முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
Embed widget