Fathers Day 2025 Wishes: தந்தை எனும் தாயுமானவன்.. தந்தையர் தினத்துக்கு இந்த போட்டோவோட வாழ்த்துகளை அனுப்புங்க..
Fathers Day 2025 Wishes in Tamil: தந்தையர் தினத்தை முன்னிட்டு கீழே காணும் வாழ்த்து செய்திகளையும், புகைப்படங்களையும் உங்கள் பெற்றோர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.

Fathers Day 2025 Wishes in Tamil: ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் ஹீரோவாக இருப்பவர் தந்தை. அந்த தந்தைக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 15ம் தேதி தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த தந்தையர் தினத்தில் தங்களது தந்தைக்கு மகன்களும், மகள்களும் கீழே காணும் புகைப்படத்தை பகிர்ந்து அன்பை பகிருங்கள்.

தந்தையை விட உலகில் நம்மை வடிவமைக்கும் சிறந்த சிற்பியும், நம்மை காக்கும் ஆசானும் வேறு யாரும் இல்லை.

கருவில் சுமந்த தாய்க்கு நிகராக தோளில் சுமக்கும் தந்தை ஒவ்வொரு மனிதனின் வாழ்விற்கும் அஸ்திவாரம்.

உற்ற சமயத்தில் நண்பனாகவும் தக்க சமயத்தில் வழிகாட்டியாகவும் இருப்பவர் அப்பா.

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே

நாம் தடைக்கல்லை தாண்ட படிக்கல்லாய் உருமாறிய உன்னத ஆத்மா தந்தை.

நெஞ்சம் எனும் ஆலயத்தில் தந்தையே தெய்வம்.

உலகை படைத்தவன் இறைவன் என்றால் உன்னை படைத்த தந்தையும் இறைவனே
உள்ளுக்குள் அழுது வெளியில் முறைத்து நம்மை வடிவமைத்த மகான் தந்தை.

அறிவு, அன்பு, ஆளுமையை தரும் மூன்று எழுத்து மந்திரம் அப்பா.
இந்த புகைப்படங்களை பகிர்ந்து உங்கள் தந்தைக்கு இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகளை கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்.





















