மேலும் அறிய

EPS On CAA: அன்று ஆதரவு; இன்று கடும் எதிர்ப்பு - சிஏஏ விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு என்ன?

EPS On CAA: நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) ஆதரவு தெரிவித்த அதிமுக, அச்சட்டத்தை அமல்படுத்திய பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது.

EPS On CAA: தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம்:

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில்,  குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா (சிஏஏ) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்த மசோதா இருப்பதாக, ஆரம்பகட்டத்திலேயே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், சிஏஏ சட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதனால், தமிழகத்தில் அதிமுக மீது கடும் அதிருப்தி எழுந்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக உள்ளிட்ட கட்சிகள், அதிமுகவை கடுமையாக சாடின.

சிஏஏ சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டாங்க - ஈபிஎஸ்

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “சிஏஏ சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டிருக்காங்க. அதை சொல்லுங்க. நாங்க தீர்வு காண்கிறோம். தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மை மக்கள் சிஏஏ சட்டத்தால் பாதிக்கப்படுறாங்கனு சுட்டிக்காட்டுங்க. நாங்க அதுக்கு பதில் சொல்றோம். யாரு பாதிச்சிருக்கா, விளக்கம் சொல்லுங்க. யாரும் பாதிக்கப்படவில்லை” என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் 2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அமல்படுத்தியுள்ளது.  ஆனால், சட்டமசோதாவிற்கு அன்று ஆதரவு அளித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சிஏஏ சட்டம் - நிலைப்பாட்டை மாற்றிய எடப்பாடி பழனிசாமி:

சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,பொதுத்தேர்தல் அறிவிக்கை வெளியாகும் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, சிஏஏ சட்டம் 2019 (குடியுரிமை திருத்தச் சட்டம்)  முதல் அமல்படுத்தப்படுவதாக அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தால் நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களாக உள்ள எந்த சமூகத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றே அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 

அதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இந்த சட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்வரும் தேர்தலை கருத்தில்கொண்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மக்களை பிளவுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.  இதன் மூலம் மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது. அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சிஏஏ திருத்தச் சட்டத்தை பூர்வ குடிமக்களான இஸ்லாமியர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதிமுக அதனை ஒருபோதும் அனுமதிக்காது. இதற்கெதிராக நாட்டு மக்களுடன் இணைந்து அதிமுகவும் ஜனநாயக ரீதியாக போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த இரட்டை நிலைப்பாடு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.

சிஏஏ சட்டத்தை ஆதரித்தது ஏன்? - எடப்பாடி பழனிசாமி:

இதனிடையே, சிஏஏ சட்டத்தை ஆட்சியில் இருந்தபோது ஆதரித்தது ஏன் என்பது குறித்து, அண்மையில் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்து இருந்தார். எஸ்டிபிஐ சார்பில் நடந்த மாநாட்டில் பேசிய அவர், “என்னுடன் பேசிய நண்பர்கள் சிலர் சிஏஏ பற்றி கேட்டார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். நான் முதலமைச்சராக இருந்தது எவ்வளவு நெருக்கடியான காலக்கட்டம் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சட்டமன்றத்தில் திமுகவை விட எங்களுக்கு 4 பேர் தாங்க அதிகம். அந்த நான்கரை ஆண்டுகாலம் நான் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. இப்போ ஒருத்தரு (ஓபிஎஸ்) வெளியே போயிருக்கார்ல, அவரை வைத்துக் கொண்டே நான் காலத்தை ஓட்ட வேண்டியதாக இருந்தது. நான் எதிர்த்து ஓட்டு போட்டால் ஆட்சி இருக்காதுனு அவர் சொன்னாரு. அதனால்  கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு, எங்களுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லாத சட்டங்களுக்கு ஆதரவு அளித்தோம்” என எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Renault Kwid on EMI: ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
Embed widget