மேலும் அறிய

Minister Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

Minister Senthil Balaji: தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அண்மையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2016 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து அதிமுகவின் அமைச்சரவையில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே புகாரின் பேரில் தான் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர் என கூறப்பட்ட நிலையில், அதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறையினர் முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது அமைச்சர் வீட்டிலேயே அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். அதேபோல் அவரது சகோதரட் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. 

மேலும், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் 26 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள் என 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்கள் எடுத்துச் சென்றதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அதாவது ஜூன் 13ஆம் தேதி அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தும் போது முதலில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வருமான வரித்துறையினரை சோதனை செய்ய விடாமல் தடுத்தனர்,  வருமான வரித்துறையினருக்கு தமிழக போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்ட நிலையில் இந்த முறை மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. 

அமைச்சர் விளக்கம்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையோ அல்லது வருமானவரித்துறையோ அவர்கள் கைப்பற்றப்படும் ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்கத்தயார் எனவும், மேலும், இந்த சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத்தயார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  தனது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த வந்துள்ளனர் என்பதை அறிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது காலை நேர நடை பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டு, உடனே தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “ அமலாக்கத்துறையினர் எந்த நோக்கத்துடன் வந்துள்ளனர் எனத் தெரியவில்லை, பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும், எனக்கு இந்த சோதனை குறித்து எந்த முன் தகவலும் வரவில்லை. அமலாக்கத்துறையோ அல்லது வருமானவரித்துறையோ அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார். மேலும், கைப்பற்றப்படும் ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்கவும் தயார்” என கூறினார்.  

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget