மேலும் அறிய

ஏழை பெண்களின் உயிரை காப்பாற்றிய லைப் லைன் பன்நோக்கு மருத்துவமனை - நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் சேவை!

பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள ஐ-பிரஸ்ட் கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று  மருத்துவர் ஜெ.எஸ் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். 

பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள ஐ-பிரஸ்ட் கருவி மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்று  மருத்துவர் ஜே.எஸ் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் லைஃப் லைன் பன்நோக்கு மருத்துவமனை சார்பில்  செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது பேசிய லேப்ரோஸ்கோபிக் மற்றும் பீடியாட்ரிக் நிபுணர் மருத்துவர் ஜெ.எஸ். ராஜ்குமார், ”மார்பக புற்றுநோய் தற்போது வேகமாக பரவி வருவதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களில் ஒருவர் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்கிறார்" என்றும் தெரிவித்தார்.

மார்பக புற்றுநோய்:

 ”குறிப்பாக கர்ப்பப்பை புற்றுநோயை பின்னுக்குத் தள்ளி மார்பக புற்றுநோய் அதிக அளவில் பெருகி வருவதாக தெரிவித்த அவர், உலகில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார் என்றார். மேலும் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகும் இரண்டு பெண்களில் ஒருவர் உயிரிழக்கிறார் என்றும், அதற்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு தாமதமாக கண்டறியப்படுவதே காரணம்" என்றும் அவர் கூறினார்.  

தொடர்ந்து பேசிய அவர், "அல்ட்ராசவுண்ட், மேமோகிராபி மற்றும் எம்ஆர்ஐ போன்ற சோதனைகள் அதிகளவு மக்கள் தொகையுடைய இந்தியா போன்ற நாடுகளுக்கு போதிய பலன் தருவதில்லை என்பதால் ஐ-பிரஸ்ட் கருவி சோதனையை எளிதாக்குகிறது. இது முற்றிலும் வலியற்றது மற்றும் கதிர்வீச்சு இல்லாதது என்பதோடு மார்பக கட்டிகளை முன்கூட்டியே கண்டறியவும் உதவுகிறது.  5 நிமிடங்களில்  அனைத்து வயது பெண்களுக்கும் சோதனை செய்யும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. 

உலக சுகாதார அமைப்பு:

துரித உணவுகள் கொழுப்பின் அளவை அதிகப்படுத்தி பெண்களுக்கு பாலின உட்புறத்தில் செயல்பாட்டை தீவிரப்படுத்துவதாகவும் இதன் காரணமாக மார்பக புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார். மேலும் 2050 ஆம் ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மார்பக புற்று நோய் பாதிக்கப்பட்டவர் இருக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும் என உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ கழகம் ஆகியவை எச்சரித்துள்ளதையும் சுட்டிக்காட்டி அவர், தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் இலவசமாக மார்பக புற்றுநோய் முகாம் நடந்தியதில் 3000 பெண்களில் சுமார்  120 பேருக்கு இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  இந்த சோதனைகளுக்கு ஐ-ப்ரஸ்ட் கருவியை பயன்படுத்தியதாகவும் இதனால் நேரம் மற்றும்செலவுகள் வெகுவாக குறைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் Ms.J.ஜெயவாணி, தலைமை ஊட்டச்சத்து நிபுணர் செல்வி வித்யா, ரோட்டரி கிளப் தலைவர்  சென்னபட்னா, லைப்லைன் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர்.ஜே.எஸ்.ராஜ்குமார், டாக்டர்.அனிருத் ராஜ்குமார், லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் சர்ஜன் டாக்டர்.சுசித்ரா, உளவியலாளர் உள்ளிட்டார் கலந்து கொண்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Breaking News LIVE: ராகுல் காந்தியை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுப்பதாக சபாநாயகரிடம் காங்கிரஸ் புகார்
Breaking News LIVE: ராகுல் காந்தியை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுப்பதாக சபாநாயகரிடம் காங்கிரஸ் புகார்
Embed widget