மேலும் அறிய

Edappadi Palanisamy : திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி.. சாடிய எடப்பாடி பழனிசாமி

திமுக ஒரு கார்பரேட் கம்பெனி என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மதுரை சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, அதிமுகவில் இருந்த சிலர் பாஜகவில் இணைந்தது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஈபிஎஸ், "இது ஜனநாயக நாடு யாரு வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம்" என்றார். திமுகவினர் வாரிசு அரசியல் செய்வதாக அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால் அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் அவர் மகனுக்கு சீட் கேட்கிறார் இது வாரிசு அரசியல் இல்லையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,  "அரசியல் வாரிசு என்றால் புரிந்துகொள்ள வேண்டும். சீட் கொடுப்பது அல்ல. தலைமைப் பொறுப்பு. திமுக தலைவராக கருணாநிதி இருந்தார், அதன்பின் ஸ்டாலின் இருக்கிறார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் வர முயற்சி செய்கிறார்கள் இதுதான் வாரிசு அரசியல். ஒரு குடும்பத்திற்கு போகக்கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை. திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்த வரையில் வாரிசு அரசியல், குடும்ப கட்சி. அது ஒரு கார்ப்பரேரேட் கம்பெனி. அதிமுகவில் என்னைப்போல் சாதாரண தொண்டனும் உயர் நிலைக்கு வர முடியும். அது அதிமுகவில் மட்டும்தான் முடியும்” என்றார்

அதிமுகவில் இருந்து விலகியவர்கள், நீக்கப்பட்டவர்கள் எல்லாம் இணைந்து சின்னத்தை முடக்கப்போவதாக பரவலாக பேச்சு இருக்கு இதை எப்படி பார்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கு, ”நீதிமன்றத்தில் எல்லா தீர்ப்பும் வந்தாச்சு, தேர்தல் ஆணையமும் கொடுத்தாச்சு, இனிமே எப்படி முடக்குவார்கள்? அவங்க ஆசை நிறைவேறாது நிராசையா தான் இருக்கும். இரட்டை இலை சின்னத்தை யாராலும் இனி முடக்க முடியாது” என்றார்.

கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”தேர்தலுக்கு இன்னும் நேரமிருக்கிறது. தேதி அறிவித்த பின் அதிமுக கூட்டணி இறுதி ஆகும். அதிமுகவை சேர்ந்த ஏ.வி. ராஜூ நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது குறித்த கேள்விக்கு, அவரு ஒரு பெரிய ஆளு இல்லை. அவரு தீபா கட்சிக்கு போய் வந்தவர். அவரை இரக்கப்பட்டு சேர்த்தோம். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது அதனால் அவரை விட்டு வைத்திருந்தோம். இப்போ அவரு கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், ”இந்த 3 ஆண்டு காலத்தில் இந்த ஆட்சி மீது கடுமையான வெறுப்பு. மக்கள் கொதித்து போய் உள்ளார்கள். விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, வீட்டுவரி உயர்வு, அதே போல் எல்லா வகையிலும் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தான் நான்கள் தேர்தலை சந்திக்கின்றோம் ஆகவே எங்கள் கூட்டணி மிக பிரம்மாண்டமாக வெற்றி பெரும். திமுக ஆட்சியில் எந்த ஒரு நல்ல திட்டமும் தமிழ்நாட்டுக்கு வராது. இந்த ஆட்சி தொடர்ந்தால் ஆண்டாவனால கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது” என்று கூறினார். 

தலைப்பு செய்திகள்

CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget