மேலும் அறிய

தேசியக் கொடி ஏற்றிய காரின் மீது காலணி வீசியிருக்கும் பா.ஜ.க.வினரின் அருவருக்கத்தக்க அரசியல்-அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் சிலர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர்.

மதுரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் சிலர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது வரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக பொதுச் செயலாளரும் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சருமான திரு. துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”75-ஆவது விடுதலை நாள் கொண்டாடப்படுகின்ற நேரத்தில், உயிரிழந்த இராணுவ வீரர் இலட்சுமணன் அவர்களது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற மாண்புமிகு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தேசியக் கொடி ஏற்றிய காரின் மீது காலணி வீசியிருக்கும் பா.ஜ.க.வினரின் அருவருக்கத்தக்க, அரசியல் பண்பாடற்ற செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டிற்காக உயிர்நீத்த ஓர் இராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதிலும் இதுபோன்று அரசியல் ஆதாயம் தேடும் அநாகரிகச் செயலில் ஈடுபட்டு, அராஜகத்தை பா.ஜ.க.வினர் கையிலெடுத்திருப்பது கேவலமான அரசியல். அது ஒருவழிப் பாதையல்ல என்பதை பா.ஜ.க.வினர் உணர வேண்டும் என எச்சரிக்கிறேன்.

ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாமல், அராஜகத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என்று தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் கனவு காண வேண்டாம். இராணுவ வீரரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தச் சென்ற மாண்புமிகு அமைச்சரின் காரின் மீது தாக்குதல் நடத்தி - உயிரிழிந்த இராணுவ வீரரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.விற்கு நாட்டுப்பற்று பற்றிப் பேசத் துளியும் அருகதை இல்லை என்பதோடு,  இச்சம்பவத்தின் வாயிலாக அந்தக் கட்சியின் “நாட்டுப்பற்று” சாயம் வெளுத்துப் போயிருக்கிறது. 

செருப்பு வீசுவது, சிலைகளைச் சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியல் தவிர வேறு எதுவும் பா.ஜ.க.வுக்குத் தெரியாது என்பது அவர்களது பண்பாடற்ற நடவடிக்கைகளால் தெரிகிறது. பதற்றத்தைப் பற்ற வைத்து வன்முறைகள் மூலமாகக் கட்சியை வளர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தால் மக்கள் மன்றத்தில் அவர்கள் அரசியல் அநாதைகளாவது நிச்சயம் என எச்சரிக்கிறேன்.ஊரெல்லாம் தேசியக் கொடி ஏற்ற வேண்டிய நேரத்தில், தேசியக் கொடி பறந்த காரில் செருப்பு வீசியதன் மூலமாக பா.ஜ.க.வின் கீழ்த்தர அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள இயக்கம்.  சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடிக்கும் இயக்கம். அமைச்சரின் கார்மீது காலணி வீசியவர்கள் - தூண்டி விட்டவர்கள் – துணைபோனவர்கள் ஆகியோர் மீது காவல்துறை உரிய நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருப்பதால் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

PM Modi: டிக்கெட் புக் செய்து பிரதமர் மோடியை கலாய்த்த காங்கிரஸ்..! ”ஒரு மணி நேரம் தான், ட்ரை பண்லாமே”
PM Modi: டிக்கெட் புக் செய்து பிரதமர் மோடியை கலாய்த்த காங்கிரஸ்..! ”ஒரு மணி நேரம் தான், ட்ரை பண்லாமே”
IND Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டி கோவிந்தா? அடித்து வெளுக்க தயாராகும் மழை - வானிலை எச்சரிக்கை
IND Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டி கோவிந்தா? அடித்து வெளுக்க தயாராகும் மழை - வானிலை எச்சரிக்கை
முடி வளர ஆபரேஷன் பண்ணப்போறீங்களா? அரசாங்கம் சொன்னதை படிச்சுட்டு போங்க!
முடி வளர ஆபரேஷன் பண்ணப்போறீங்களா? அரசாங்கம் சொன்னதை படிச்சுட்டு போங்க!
Gold Silver Rate Feb.14th: வேலைய காட்டிட்டியே.! குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை; எவ்வளவு.?
வேலைய காட்டிட்டியே.! குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை; எவ்வளவு.?
ABP Premium

வீடியோ

Haryana Minister Anil Vij Vs SP | BJP அமைச்சர் vs SP
Kerala Viral Woman | Real அவ்வை சண்முகி!
Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: டிக்கெட் புக் செய்து பிரதமர் மோடியை கலாய்த்த காங்கிரஸ்..! ”ஒரு மணி நேரம் தான், ட்ரை பண்லாமே”
PM Modi: டிக்கெட் புக் செய்து பிரதமர் மோடியை கலாய்த்த காங்கிரஸ்..! ”ஒரு மணி நேரம் தான், ட்ரை பண்லாமே”
IND Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டி கோவிந்தா? அடித்து வெளுக்க தயாராகும் மழை - வானிலை எச்சரிக்கை
IND Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டி கோவிந்தா? அடித்து வெளுக்க தயாராகும் மழை - வானிலை எச்சரிக்கை
முடி வளர ஆபரேஷன் பண்ணப்போறீங்களா? அரசாங்கம் சொன்னதை படிச்சுட்டு போங்க!
முடி வளர ஆபரேஷன் பண்ணப்போறீங்களா? அரசாங்கம் சொன்னதை படிச்சுட்டு போங்க!
Gold Silver Rate Feb.14th: வேலைய காட்டிட்டியே.! குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை; எவ்வளவு.?
வேலைய காட்டிட்டியே.! குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை; எவ்வளவு.?
அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் பணி நிரந்தரம்; திமுக வாக்குறுதி என்னாச்சு? அன்புமணி கேள்வி
அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் பணி நிரந்தரம்; திமுக வாக்குறுதி என்னாச்சு? அன்புமணி கேள்வி
7 மாதம் ஆகியும் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன்? 3274 பேரின் எதிர்காலம் கேள்விக்குறி- தேர்வர்கள் வேதனை!
7 மாதம் ஆகியும் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன்? 3274 பேரின் எதிர்காலம் கேள்விக்குறி- தேர்வர்கள் வேதனை!
Affordable CNG Cars: ரூ.10 லட்சத்துக்குள்ள ஒரு நல்ல CNG கார தேடுறீங்களா.? அப்போ இந்த லிஸ்ட் பார்த்து Select பண்ணுங்க
ரூ.10 லட்சத்துக்குள்ள ஒரு நல்ல CNG கார தேடுறீங்களா.? அப்போ இந்த லிஸ்ட் பார்த்து Select பண்ணுங்க
TN Election 2026: 20 தொகுதிகளில் பாஜகவின் நிலைமை..! ஆட்டம் போடும் டெல்லி, டான்ஸ் ஆடும் களநிலவரம் - 2026 எப்படி?
TN Election 2026: 20 தொகுதிகளில் பாஜகவின் நிலைமை..! ஆட்டம் போடும் டெல்லி, டான்ஸ் ஆடும் களநிலவரம் - 2026 எப்படி?
Embed widget