DMK Meeting: அடுத்த கட்ட நாடாளுமன்ற தேர்தல் பிளான்: தொடங்கியது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
DMK Meeting: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
நெருங்கும் மக்களவை தேர்தல்:
மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2019 மக்களவை தேர்தல் போல மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல, தேசிய அளவில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெற மும்முரம் காட்டி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பிரம்மாண்ட I.N.D.I.A கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி வெற்ற பெற மாநில அளவில் வலிமையுடன் இருக்கும் அரசியல் கட்சிகள் முதலில் தங்களது வெற்றியை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக தென்னிந்தியாவில் தான் மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. அதில் தமிழ்நாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் திமுக மக்களவை தேர்தலில் வெற்றி வாகைசூட மும்முரமாக உள்ளது.
இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
இந்நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காணொலி வாயிலாக நடைபெற்றும் வரும் இக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். ஆலோசனை கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் பணிகள், மாவட்ட வாரியாக பணிகள், பூத் கமிட்டி புதுப்பிப்பது, தேர்தலில் திமுக வேட்பாளர்களை எங்கே களமிறக்குவது, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க
Commercial LPG Cylinder Price: இன்று முதல் உயரும் வணிக எரிவாயு சிலிண்டர் விலை; எவ்வளவு தெரியுமா?