TN Rain Alert: வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை இருக்குமா? முழு விவரம்..
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இலங்கை கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
![TN Rain Alert: வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை இருக்குமா? முழு விவரம்.. deep low pressure likely to move towards srilanka as a result heavy to moderate rains expected in isolated parts of tamilnadu TN Rain Alert: வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை இருக்குமா? முழு விவரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/21/9ce7d0623542e0eceb0acf1523b36d551671592951384589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இலங்கை கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் மத்தியப் பகுதிகள் மீது நிலைகொண்டு இருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இப்போது தென்மேற்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி நிலைகொண்டு உள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கை கரையை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக வரும் 25 ஆம் தேதி வரை தென் கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
21.12.2022 மற்றும் 22.12.2022: குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
23.12.2022: மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)