Sasikala: சசிகலாவின் கடைசி அஸ்திரம் காலி... அதிமுக பொதுச் செயலாளர் ரத்து செல்லும் என நீதிமன்றம் உத்தரவு!
சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பொதுக்குழு நீக்கிய தீர்மானம் செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பொதுக்குழு நீக்கிய தீர்மானம் செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒபிஎஸ் ஒருங்கிணைப்பாளார் – ஈபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை ஏற்கக்கூடாது என ஒபிஎஸ் - இபிஎஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#BREAKING | சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அதிமுக நீக்கியது செல்லும் - சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்புhttps://t.co/wupaoCQKa2 | #AIADMK #Sasikala @EPSTamilNadu @OfficeOfOPS pic.twitter.com/qCKrsWKprL
— ABP Nadu (@abpnadu) April 11, 2022
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா இரண்டாம் கட்ட ஆன்மீக சுற்றுப்பயணமாக இன்று மாலை சேலம் வர உள்ளார். கடந்த மாதம் முதற்கட்டமாக தென்தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டா சசிகலா, இந்த முறை மேற்கு மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய திருக்கோவில்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
சசிகலா தரப்பில் ஆன்மீகச் சுற்றுப் பயணம் என்று சொல்லப்பட்டாலும் பல்வேறு இடங்களில் உள்ள அதிமுக தொண்டர்களை நேரடியாக சந்திக்க உள்ளார். குறிப்பாக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கும் சசிகலா, அவரை சந்தித்த அல்லது தொலைபேசியில் பேசிய தொண்டர்களை அக்கட்சியில் இருந்து பலர் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இன்று அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள் பலர் சந்திக்க வாய்ப்பு வாய்ப்புள்ளதால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி காத்திருப்பதாக அதிமுகவினர் பேசி வருகின்றனர். சமீபத்தில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த, எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் சேலம் வருகை அவர் திமுகவிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவரைக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார். இருப்பினும் பல இடங்களில் சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்துகின்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்