Cyclone Michaung: ஆந்திராவில் தீவிர புயலாக கரையை கடந்தது மிக்ஜாம் புயல்; மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று
சென்னையில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
![Cyclone Michaung: ஆந்திராவில் தீவிர புயலாக கரையை கடந்தது மிக்ஜாம் புயல்; மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று Cyclone Michaung Makes Landfall in Andhra Pradesh Latest Weather News Tamil Cyclone Michaung: ஆந்திராவில் தீவிர புயலாக கரையை கடந்தது மிக்ஜாம் புயல்; மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/05/3abe71285ca747827a4c004bf9df07961701773862868571_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மிக்ஜாம் புயல் தெற்கு ஆந்திரா பாபட்லாவிற்கு அருகே கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக இருந்த மிக்ஜாம் புயல் வலுவிழந்து கரையை கடந்தது. நண்பகல் 12.30 தொடங்கி, பிற்பகல் 2.30 வரை கரையை கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக கரையை கடந்த நிலையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூரைக்காற்று வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வடக்கு நோக்கி நகரும் புயல் படிப்படியாக வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரம்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
"05.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
06.12.2023 மற்றும் 07.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10.12.2023 மற்றும் 11.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பூந்தமல்லி (திருவள்ளூர்) 34, ஆவடி (திருவள்ளூர்) 28, காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்) 27, சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), சென்னை (N) AWS (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 24, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை) தலா 22, ராயபுரம் (சென்னை), மண்டலம் 13 அடையார் (சென்னை), திரு.வி.க நகர் (சென்னை), மண்டலம் 05 GCC (சென்னை), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), செம்பரம்பாக்கம்-வருவாய்த்துறை (காஞ்சிபுரம்) தலா 21". இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)