DMK MLA Sacked: கடலூர் திமுக எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம் - பொதுச்செயலாளர் துரைமுருகன்
அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அக்கட்சியில் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கழகத்தின் அறிவிப்பை மீறி மேயருக்கான மாற்று வேட்பாளரை களம் இறக்கியதால் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் தலைமை கழகம் அறிவிப்பு
நீக்கத்திற்கான காரணம்
திமுக கடலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் மாற்று வேட்பாளரான திமுகவைச் சேர்ந்த மாவட்ட பொருளாளர் குணசேகரின் மனைவி கீதா என்பவரை மாற்று வேட்பாளராக போட்டியிட செய்தார். மேலும் கீதா மற்றும் எம்எல்ஏ அய்யப்பன் ஆகியோர் திமுக மற்றும் கூட்டணி கட்சி வார்டு கவுன்சிலர்கள் விழுப்புரத்தில் தனியார் சொகுசு விடுதிகள் தங்கி இருந்தனர்.
இறுதியில் கவுன்சிலர்கள் காவலர்கள் மூலம் கவுன்சிலர்கள் சொகுசு விடுதியில் சிறைபிடிக்கபட்டனர். 7 பேர் மட்டும் சிறைபிடித்து வைத்திருந்த்தால் அவர்கள் மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை.
Local Body Election: திமுக வேட்பாளர்களையே தோற்கடித்த திமுக வேட்பாளர்கள்- எங்கெங்கே?
இதன் காரணமாக கடலூர் நகர செயலாளரின் மனைவி சுந்தரி ராஜா மேயராக பதவி ஏற்றார். இந்த நிலையில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் கட்சியின் அறிவிப்பை மீறி நடந்து கொண்டதாக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இந்த சூழலில் இன்று கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் அவர்கள் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார், என திமுக சார்பில் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது கட்சியினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் நெல்லிக்குப்பம் நகராட்சியில் கட்சியின் அறிவிப்பை மீறி விசிகாவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்