மேலும் அறிய

திமுக - அதிமுக கூட்டணி.. ராஜேந்திர பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் தான் தூதர்கள்.. நிர்மல்குமார் விளாசல்!

அதிமுகவில் என்ன செய்கிறோம் என தெரியாமல் ஒவ்வொரு முன்னாள் அமைச்சரும் 10 பேரை வைத்துக் கொண்டு மேடையைப் போட்டு பேசுகிறார்கள். அவர்கள் புரிந்து தான் பேசுகிறார்களா என தெரியவில்லை என சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

திமுக, அதிமுக இணையும் கூட்டணிக்கு கே.டி.ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும் தூதர்களாக இருப்பார்கள் என நினைக்கிறேன் என்று அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அனிதா ராதாகிருஷ்ணன் 6 மாதத்தில் இந்த ஆட்சி கவிழும் என சொன்னது பற்றியும், ராஜேந்திர பாலாஜி மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் ஆட்சி இருக்காது என சொன்னது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இவர்கள் இரண்டு பேரும் பேசுவதைப் பார்த்தால் திமுக, அதிமுக கூட்டணிக்கு இவர்கள் தான் தூதர்களா என்ற கேள்வி எழுகிறது. இவர்கள் என்ன முயற்சி எடுத்தாலும் ஒன்றும் அசையப் போவதில்லை. ராஜேந்திர பாலாஜி உள்ளாட்சி தேர்தல் வரை எங்கு இருக்கப் போகிறார் என தெரியவில்லை. தென் மாவட்டங்களில் அதிமுக கிளைக்கழகம் வரை கட்சியே இல்லாமல் தான் இருக்கிறது. 

மாவட்ட அளவில் மட்டும் தான் அதிமுக உள்ளது. கட்சியில் என்ன செய்கிறோம் என தெரியாமல் ஒவ்வொரு முன்னாள் அமைச்சரும் 10 பேரை வைத்துக் கொண்டு மேடையைப் போட்டு பேசுகிறார்கள். அவர்கள் புரிந்து தான் பேசுகிறார்களா என தெரியவில்லை. நேற்றைய தினம் எல்லா முன்னாள் அமைச்சர்களும் ஆளுக்கொன்றாக பேசுகின்றனர். அதில் ஒருவர் பாஜக எல்லாத்தையும் பார்த்துக்கிடும் என சொல்கிறார். மற்றொருவர் ஸ்டாலின் கோபப்பட வேண்டும் என நினைக்கிறார். அங்கு யாருக்குமே அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதில் நம்பிக்கையில்லை. அக்கட்சியினருக்கே அது தெரியவில்லை” என விமர்சித்தார். 

தொடர்ந்து அவரிடம், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் வீரபாண்டியன் இந்த ஆட்சியில் அதிகமாக குதிரைபேரம் நடக்கிறது” என குற்றம் சாட்டியிருக்கிறாரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “குதிரை பேரத்தில் யார் மாட்டியிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் தான் மாட்டியிருக்கிறார்கள். குதிரை பேரம் என்றால் யாரையாவது பணம் கொடுத்து வாங்குவது தான். தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு வருபவர்களை   குதிரைப் பேரமாக கருத முடியாது. அது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட முடிவாகும். யாரையும் நாங்கள் வாங்க என அழைக்கவில்லை. மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைப்பை பிடிக்காமல் கூட வந்திருக்கலாம்” என பதிலளித்தார். 

Also Read: CM Vijay: பேனர் கலாச்சாரத்துக்கு முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி.. திருந்துவார்களா தவெக எம்.எல்.ஏ.,க்கள்?

குதிரைப்பேரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை மற்றும் சிபிஐக்கு திமுக தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது பற்றி அடுத்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, திமுகவால் வேறு என்ன செய்ய முடியும்?.. சிபிஐக்கு கடிதம் எழுதினால் அவர்கள் வந்து விசாரிக்க மாட்டார்கள் என்பது ஆர்.எஸ்.பாரதிக்கு தெரியாதா?.. சிபிஐ விசாரிக்க வேண்டுமென்றால் ஒன்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் அல்லது அரசு முடிவெடுக்க வேண்டும். டைம்பாஸ் ஆகவில்லை என அறிவாலயத்தில் இருந்துக் கொண்டு ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியிருக்கிறார். இதை நாம் பெரிதாக எடுக்கத்தேவையில்லை. 

அதேசமயம் ஆளுநர் தான் இந்த விவகாரத்தில் என்ன செய்து விட முடியும்?.. அவருக்கும் தான் எல்லாம் தெரியும்.. செந்தில் பாலாஜி மற்றும் அவர் தரப்பு ஆட்சிகள் ஈடுபட்டதும் ஆளுநருக்கு தெரியும். இப்போது வரும் தொடர்ச்சியாக குதிரைப் பேரத்தில் திமுக, அதிமுக முயற்சி மேற்கொண்டு வருகிறது என சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget