மேலும் அறிய

கடலூரில் விதிகளை மீறும் பட்டாசு கடைகள்! அதிகாரிகள் நடவடிக்கை எங்கே ?

அதிகளவு வெடிமருந்து திணித்து உருவாக்கப்படும் பட்டாசுகளால், உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதுபோன்ற பட்டாசு உற்பத்தியை வருவாய்த்துறை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் விதிமீறும் பட்டாசு கடைகளை கண்காணிப்பதுடன், கள்ளச்சந்தையில் விற்பனையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விதிமீறும் பட்டாசு கடை - நடவடிக்கை தேவை

தீபாவளி என்றாலே முக்கிய இடத்தை பிடிப்பது பட்டாசுதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து, பட்டாசு வெடிப்பது வழக்கம். பட்டாசு விபரீதம் புரியாத சிறுவர்கள் சிலர், முன்னெச்சரிக்கை இல்லாமல் தீ விபத்தில் சிக்கி காயமடைவது வழக்கமாக உள்ளது. இதற்காக, அந்தந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

அதுபோல், பட்டாசு தொழிற்சாலை, உரிமம் பெற்ற மற்றும் உரிமம் கோறும் பட்டாசு கடைகளில் வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் போலீசார் என ஒருங்கிணைந்து தடையில்லா சான்று தரும் அதிகாரிகள் நேரில் களஆய்வு செய்வது வழக்கம். அவசர கால விபத்துகளில் வெளியேறும் வகையில் இருபுற வழிகள், புதுப்பிக்கப்பட்ட மின்சாதன ஒயர்கள், மின் விளக்குகள் மற்றும் மணல் மூட்டைகள், தண்ணீர் தொட்டி போன்ற தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

புதிதாக உரிமம் வாங்குவதில் பல்வேறு சிரமம்

மேலும், சிகரெட், பீடி போன்ற எளிதில் தீ பற்றும் பொருட்களை உபயோகிக்க கூடாது போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கடைகளுக்கு முன் பொருத்தியிருக்க வேண்டும். இதன் மூலம் சேமிப்பு குடோன்கள், பட்டாசு கடைகளில் பெருமளவு விபத்துகள் தவிர்க்கப்படும். கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதால், புதிதாக உரிமம் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. மேலும், பட்டாசு கடைக்கு உரிமம் பெறாமல் விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் ஆகியன வெடிமருந்துச் சட்டம் 1884-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம்.

விதிமுறைகளை மீறி பட்டாசு கடைகள்

ஆண்டு தோறும் விதிமுறைகளை மீறி பட்டாசு கடைகள் திறக்கப்படுகின்றன. இவற்றை அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தற்போது, மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம் கோட்டங்களில் புதிதாக அனுமதி கோரும் கடைகள், உரிமம் புதுப்பிக்கும் கடைகளில் அதிகாரிகள் களஆய்வு செய்து வருகின்றனர்.

அதில், உரிய வழிகாட்டி முறைகள் இல்லாத கடைகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை தீவிர சோதனையில் ஈடுபட வேண்டும். வருவாய், தீயணைப்பு, காவல் துறைகளில் அனுமதி பெற்றால் மட்டுமே பட்டாசு கடை நடத்த முடியும். இதற்கென கட்டுப்பாடுகள் இருந்தாலும், குறுக்கு வழியில் சிலர் அனுமதி பெறுவது தொடர்கிறது. கடந்த காலங்களில் 50 ஆயிரம் ரூபாய் செலவழித்தால் பட்டாசு கடைக்கு எளிதில் அனுமதி கிடைக்கும் வகையில், ஓய்வுபெற்ற சில அரசு அதிகாரிகள் கூட நேரடியாக களத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி விற்பனைக்கு அதிக சத்தம் தரும் பட்டாசுகள், கள்ள சந்தையில் தயாராகின்றன. இவை வெடித்து சிதறும் போது காகித துகள்கள் அதிகளவு சிதறுவதுடன், சத்தமும் அதிக அளவில் கேட்கிறது. இதனை சிறுவர்கள், இளைஞர்கள் விரும்பி வாங்குவதால், விற்பனையும் அதிகமாக உள்ளது. ஆனால், அதிகளவு வெடிமருந்து திணித்து உருவாக்கப்படும் பட்டாசுகளால், உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதுபோன்ற பட்டாசு உற்பத்தியை வருவாய்த்துறை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைப்பு செய்திகள்

கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
Super El Niño: விரைவில் தாக்கும் எல்.நினோ.. சிக்கப்போகும் 12 மாவட்டங்கள்.. கலக்கத்தில் மக்கள்!
Super El Niño: விரைவில் தாக்கும் எல்.நினோ.. சிக்கப்போகும் 12 மாவட்டங்கள்.. கலக்கத்தில் மக்கள்!
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
வெரி ராங் ப்ரோ.. எல்லா திட்டத்துக்கும் வெற்றின்னு பேர் வைப்பீங்களா? - விஜயை விளாசிய தமிழிசை!
வெரி ராங் ப்ரோ.. எல்லா திட்டத்துக்கும் வெற்றின்னு பேர் வைப்பீங்களா? - விஜயை விளாசிய தமிழிசை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget