முயல் பிடித்து தருகிறேன் ! சிறுமிக்கு ஆசை வார்த்தை ! சமையல் மாஸ்டரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமிக்கு சமையல் மாஸ்டரால் ஏற்பட்ட பாலியல் கொடுமை

உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமி
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கீழ் செண்டத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ரங்கநாதன் சமையல் மாஸ்டராக உள்ள நிலையில் ஆர்டர் எடுத்து சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் மாதனூர் பகுதியை சேர்ந்த 4 - ம் வகுப்பு படிக்கும் 9 வயது பள்ளி சிறுமி செண்டத்தூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பள்ளி விடுமுறைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
முயல் பிடித்து தருவதாக ஆசை வார்த்தை
சிறுமியின் உறவினர் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த ரங்கநாதன் சிறுமியுடன் பேசி சிரித்து பழகி வந்திருக்கிறார். எனவே சிறுமியும் அடிக்கடி ரங்கநாதன் வீட்டிற்கு சென்று அவருடன் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதே போல ரங்கநாதன் வீட்டிற்கு விளையாட சென்ற சிறுமியை அவர் முயல் பிடித்து தருவதாக ஆசை வார்த்தை கூறி காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் யாரும் இல்லாத நேரமாக பார்த்து சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
சமையல் மாஸ்டர் மீது போக்சோ வழக்கு
அச்சமடைந்த சிறுமி ரங்கநாதனிடமிருந்து தப்பித்து சென்று நடந்தது குறித்து அவரது தாயிடம் தெரிவித்துள்ளார். மகள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக மேல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறவினர் வீட்டில் மறைந்திருந்த ரங்கநாத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் சமையல் மாஸ்டர் ரங்கநாதன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
பள்ளி விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்கு சென்ற 9 வயது சிறுமியிடம் அப்பகுதியில் உள்ள சமையல் மாஸ்டர் காட்டுக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறிய சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு உரிய மருத்துவ ஆலோசனை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
ட்ரெண்டிங் செய்திகள்






















