மேலும் அறிய

வேட்டமங்கலத்தில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கான 90 நாட்கள் பயிற்சி நிறைவு

பயிற்சி மையத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 139 தீயணைப்பு வீரர்களுக்கு 90 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

வேட்ட மங்கலத்தில் 90 நாட்கள் நடந்த புதிய தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி நிறைவு பெற்றது. இதை அடுத்து அவர்கள் சாகச நிகழ்ச்சி நடத்தி அசத்தினர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், 1,204 புதிய தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தாம்பரம் மாநில பயிற்சி மையம் மற்றும் தற்காலிக பயிற்சி மையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.


வேட்டமங்கலத்தில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கான 90 நாட்கள் பயிற்சி நிறைவு

இந்த 9 பயிற்சி மையங்களில் ஒன்றான நொய்யல் வேட்டமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்களுக்கான தற்காலிக பயிற்சி மையம் தொடங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி மையத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 139 தீயணைப்பு வீரர்களுக்கு 90 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.


வேட்டமங்கலத்தில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கான 90 நாட்கள் பயிற்சி நிறைவு

பயிற்சி முகாமில் கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர்கள் சந்திரகுமார் (கரூர்), துறை (நாகப்பட்டினம்), வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் 5 தீயணைப்பு நிலைய அலுவலர்கள், 10 முன்னணி தீயணைப்பு வீரர்கள், 10 தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைத்தல், மீட்பு பணிகள், விபத்துகளில் இருந்து மீட்டல், நீச்சல் பயிற்சி, மழையேற்றம் பயிற்சி, யோகா, தீயணைப்பு கருவிகளை இயக்குதல், நீர் விடு குழாய் பயிற்சி, உடற்பயிற்சி, தடை தாண்டும் பயிற்சி,ஏணி ஏறுதல், கயிறு ஏறுதல் உட்பட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.


வேட்டமங்கலத்தில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கான 90 நாட்கள் பயிற்சி நிறைவு

பயிற்சி வகுப்பு 3 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இறுதி நிகழ்ச்சி அணிவகுப்பு, ஒத்திகை சாகச நிகழ்ச்சிகள், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் கேடயமும் வழங்கினர். நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவிற்கு திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் காங்கேய பூபதி தலைமை தாங்கி பயிற்சி முடிவு பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் பயிற்சி நிறைவு பெற்ற 139 தீயணைப்பு வீரர்கள் தங்களது பயிற்சி நிறைவு அணிவகுப்பில் ஈடுபட்டனர். அப்போது வேலாயுதம் பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன், பயிற்சியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget