நிறம் சேர்க்கப்பட்ட அப்பளம், வடகம், வத்தலால் புற்றுநோய் ஆபத்து..? -உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
தரமற்ற, நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உட்கொள்வதால் வயிற்றுபுண். நாளடைவில் புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தலின் தரத்தை ஆய்வு செய்ய உணவு பாதுகப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இவைகளில் மக்கள், குழந்தைகளை கவரும் வகையில் அனுமதித்ததை விட அதிகமாக அனுமதிக்கப்படாத நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நிறம் சேர்த்த வடகம், வத்தல், அப்பளத்தை உண்பதால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. unavupugar@gmail.com என்ற மின்னஞ்சலில் உணவுப்பொருள் தரக்குறைபாடு குறித்து புகாரளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட முழு அறிக்கை:
பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உட்கொள்ளும் திறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வரப் பெற்றுள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன் படி குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றின் வரையறுக்கப்பட்டுள்ளது. மேற்படி குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றில் Carmosine Tartrazine, Sunset yellow, Ponceau 4R உள்ளிட்ட பல நிறமிகள் (DYES) சேர்க்கப்படுகின்றன. இவை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட விட அதிகமாகவும், அனுமதிக்கப்படாத நிறமிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் தரமற்ற, நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உட்கொள்வதால் வயிற்றுபுண், நாளடைவில் புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குடல் அப்பளம், வடகம், வத்தல் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மேலும். வடகம் / வத்தல் தயாரிக்கும் அனைத்து தயாரிப்பாளர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் - 2011-ல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்வாய் ஆணையத்தின் உத்தரவு படி, அப்பளம், வடகம், வத்தல் தயாரிக்கும் அனைத்து உணவு வணிக நிறுவனங்களும், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் பொழுதும், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் நுகர்வோருக்கு வழங்கப்படும் ரசீதுகளில் தங்களுடைய உணவு பாதுகாப்பு உரிம எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலும், கடைகளில் விற்பனை செய்யப்படும் குடல் அப்பளம், வடகம், வத்தல் பொட்டலங்களின் மீதுள்ள லேபிள்களில் உணவு பாதுகாப்பு துறையின் உரிம எண், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் முழுமையான முகவரி, நிகர எடை, லாட் / கோடு / பேட்ஜ் எண், தயாரிப்பு தேதி, பயன்படுத்த கூடிய கால அளவு, Nuertional information ஆகியவை குறித்த விபரங்கள் இடம் பெற வேண்டும். எனவே பொதுமக்கள் குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை கடைகளில் வாங்கும் பொழுது மேற்குறிப்பிட்ட விவரங்கள் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும்.
உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகிய 434 உணவு மாதிரிகள் பாகுப்பாய்வு செய்யப்பட்டு 56 உணவு மாதிரிகள் தரமானது எனவும் 301 உணவு மாதிரிகள் பாதுகப்புற்றது எனவும், 77 உணவு மாதிரிகள் தரம் குறைவானது மற்றும் தப்புக் குறியிடப்பட்டது எனவும் அறிக்கை பெறப்பட்டுள்ளது. மேலும், பாதுகப்பற்றது என அறிக்கை பெறப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உற்பத்தி செய்த தயாரிப்பாளர் மற்றும் விற்பனையனர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006-ன் படி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 99 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ14,60,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தரம் குறைவானது/ தப்புக் குறியிடப்பட்டது என அறிக்கை பெறப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியாற்றை உற்பத்தி செய்த தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீது மாவட்ட நீதி வழியில் தீர்ப்பு வழங்கும் அலுவலர் (Adipuscathng Officer) நீதிமன்றத்தில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 54 வழக்குகளுக்கு ' தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ.7.49,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அனைத்து விற்பனை கடைகளிலும் தொடர் ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை எளிதில் கவரும் நோக்கில் குடல் அப்பளம், வடகம். வத்தல் ஆகியவை பல வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. போதிய விழிப்புணர்வு இன்றி இவ்வாறு நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம் வத்தல் ஆகியவற்றை உட்கொள்வதால் வயிற்றுபுண் மற்றும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே. இவற்றினை தவிர்த்து ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ளலாம்.
மேற்படி குடல் அப்பளம், வடகம், வத்தல் மற்றும் பிற உணவுப் பொருட்களில் உள்ள தரம் பற்றிய குறைபாடு குறித்து 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் செய்யலாம். மேலும், unavupugar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் புகார் அளிக்கலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )