RRTS TRAIN: கோவை To சேலம் 90 நிமிஷம்.. 160 கிலோமீட்டர் வேகம்.. திருப்பூர், ஈரோடுக்கும் RRTS ரயில்
Coimbatore-Salem Regional Rapid Transit System (RRTS): சேலம் முதல் கோயம்புத்தூர் வரை, அதிவிரைவு போக்குவரத்து ரயில் சேவை மூலம் 1:30 மணி நேரத்தில் பயணிக்கலாம்.

Salem Regional Rapid Transit System (RRTS) : " கோயம்புத்தூர் - சேலம் வரை அதிவிரைவு போக்குவரத்து ரயில் சேவை உருவாக்குவதற்கான சாத்திய கூறுகளை ஆராய, டெண்டர் விடப்பட்டுள்ளது"
விரைவு போக்குவரத்து அமைப்பு- Regional Rapid Transit System (RRTS Train):
தமிழ்நாடு வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில், அதிக போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் அவதி பெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் ஏற்பட்டு வரும் பரவலான பொருளாதார வளர்ச்சி. விரிவான நகரமயமாக்களை கருத்தில் கொண்டு தலைநகர், புது டெல்லி-மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையே மிக மற்றும் அதிவேக ரயில் போக்குவரத்து இயக்கப்படுவதைப் போன்று, மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு ஒன்றினை தமிழ்நாட்டில் ஏற்படுவதற்காக சாத்தியக்கூறுகள் ஆராயப்பட உள்ளது.
160 கிலோமீட்டர் ஸ்பீட் (160 Km/hr Speed)
1 மணி நேரத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில், செல்லக்கூடிய மிக அதிவேக ரயில்வே அமைப்பினை, 3 வழித்தடங்களில் உருவாக்கிட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால், விரிவான சாத்தியக்கூறிகள் ஆய்வு ஆராயப்பட உள்ளன. இதுகுறித்து அறிவிப்பினை, பட்ஜெட்டில் தமிழ்நாடு நிதி அமைச்சர் அறிவித்திருந்தார்.
கோயம்புத்தூர் - சேலம் அதிவிரைவு ரயில் ( Coimbatore - Salem RRTS Train)
மண்டல அதிவிரைவு போக்குவரத்து திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும். காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம், வேலூர், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
கோயம்புத்தூரில் இருந்து, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சேலத்திற்கு, 185 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த போக்குவரத்து அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தால், நீண்ட தூரத்தை ஒரு சில நிமிடங்களில் கடந்து விட முடியும். கோயம்புத்தூரில் இருந்து சேலத்திற்கு ஒன்றரை மணி நேரத்தில் செல்லக் கூடிய வகையில் இந்த போக்குவரத்து அமையப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ?
சாத்தியக்கூறு தயாரிப்பது குறித்த சென்னை மெட்ரோ நிறுவனம் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், ஆறு மாதங்களில் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். வழித்தடம், நிறுத்தங்கள் அமைவிடம், தேவையான நிலம் மற்றும் செலவு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும்.
சிறப்பம்சங்கள் என்ன ? Key Features of RRTS Train
இந்த திட்டத்தின் மூலம் திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கப்பட உள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு நகரங்களும் மிக முக்கிய நகரங்களாக உருவெடுத்து வருகின்றன. அதிவிரைவு போக்குவரத்து சேவை என்பது, இந்த நகரங்களின் வளர்ச்சியை இரண்டு மாடங்காக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















