மேலும் அறிய

யாருக்கும் தெரியாத பதிப்பகம்... 1,800 புத்தகங்கள் கொள்முதல்! அன்புமணி எழுப்பிய அதிர்ச்சி புகார்!

பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் நடந்த ஊழல் குறித்து ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கோவையில் புதிதாகத் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில்  ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  கல்வி, நூலகம் சார்ந்த விஷயங்களிலும், அறிவை வளர்க்கும் நூல்களை வாங்குவதிலும்  ஊழல் செய்வதை மன்னிக்கவே முடியாது.

 எவராலும்  அறியப்படாத ‘அகல் விளக்கு’ என்ற பதிப்பகத்தின் பெயரில் அச்சிடப்பட்ட 1,800 புத்தகங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும், நாலடியார் நூல்களை மற்ற பதிப்பகங்கள் ரூ. 350-க்கு விற்கும் நிலையில்,  ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ என்னும் முந்நூறு பக்க நூலை ரூ. 1,445 வாங்கியிருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன்  குற்றஞ்சாட்டியுள்ளார். அதை பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் மறுமொழிந்துள்ளார்.

அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது தான் நூலகங்களின் நோக்கம். அவற்றில் மக்களுக்கு பயனுள்ள, அறிவை வளர்க்கக்கூடிய நூல்கள் தான் இடம்பெற வேண்டும். எவராலும்  அறியப்படாத, யாருக்கும் பயன்படாத  நூல்களை இதுவரை இல்லாத  விலையைக் கொடுத்து வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். இதன் பின்னணியில் உள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

எனவே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து கையூட்டுத் தடுப்புப் பிரிவு  விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.  ஊழலின் பின்னணி குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக  விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் பட்டா மாற்றம் இனி ஈஸி! களமிறங்கிய லைசென்ஸ் சர்வேயர்கள் - பொதுமக்களுக்கு புதிய வசதி!
புதுச்சேரியில் பட்டா மாற்றம் இனி ஈஸி! களமிறங்கிய லைசென்ஸ் சர்வேயர்கள் - பொதுமக்களுக்கு புதிய வசதி!
9 மாணவிகளிடம் பாலியல் சீண்டல் புகார்: தலைமையாசிரியர் பணிநீக்கம் - போலீசார் விசாரணை!
9 மாணவிகளிடம் பாலியல் சீண்டல் புகார்: தலைமையாசிரியர் பணிநீக்கம் - போலீசார் விசாரணை!
அரைக்கால் டவுசர்… கையில் இரும்பு ராடு… விழுப்புரத்தில் திருட வந்த நபரால் பரபரப்பு!
அரைக்கால் டவுசர்… கையில் இரும்பு ராடு… விழுப்புரத்தில் திருட வந்த நபரால் பரபரப்பு!
"இன்ஸ்டாகிராமில் பழகி கோவிலில் திருமணம்" அடுத்த நொடியே 'எஸ்கேப்' ஆன காதலன்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாய் திறப்பீர்களா டம்மி டாடி?" திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய திமுக நிர்வாகி; மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
MK Stalin:
MK Stalin: "அணையைக் கூட திறக்கிறார்கள்.. ஆனால் முதல்வர் வாயை யாராலும் திறக்க முடியவில்லை"! மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
"ஆதார் கார்டு முகவரியால் அம்பலமான வழக்கறிஞரின் லீலைகள்" பெண்ணிடம் ரூ.21 லட்சம் அபேஸ்
அல்ரெடி அன்பில் மகேஷ், கே.என்.நேரு.. இப்போ துரைமுருகன்..! அடுத்தடுத்து சிக்கும் முக்கிய தலைகள்..! நெருக்கடியில் திமுக
அல்ரெடி அன்பில் மகேஷ், கே.என்.நேரு.. இப்போ துரைமுருகன்..! அடுத்தடுத்து சிக்கும் முக்கிய தலைகள்..! நெருக்கடியில் திமுக
Madurai Bike Race:
Madurai Bike Race: "நான் மோசமான ஆளு" கானா பாட்டுப் போட்டு பைக் ரேஸ்.. எல்லை மீறும் இளம்பெண்கள்.. தட்டித் தூக்குமா போலீஸ்?
Guru Peyarchi: 3 முறை குரு பெயர்ச்சி.. எப்போது தெரியுமா? கோடீஸ்வர யோகம் யாருக்கு? உஷாராக இருக்க வேண்டியது யார்?
Guru Peyarchi: 3 முறை குரு பெயர்ச்சி.. எப்போது தெரியுமா? கோடீஸ்வர யோகம் யாருக்கு? உஷாராக இருக்க வேண்டியது யார்?
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
புஷ்கர் திருவிழா - ரூ. 21 கோடி மதிப்பிலான குதிரை முதல் 1500 கிலோ எடை கொண்ட எருமை வரை
புஷ்கர் திருவிழா - ரூ. 21 கோடி மதிப்பிலான குதிரை முதல் 1500 கிலோ எடை கொண்ட எருமை வரை அணிவகுப்பு
Embed widget