Mekedatu Dam Resolution : சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- இன்று சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
TN Assembly Mekedatu Dam Resolution : காவிரி நீரை தடுத்து மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசின் முதல் தீர்மானமாக மேகதாது அணை கட்டுவதை தடுக்கும் வகையில் தீர்மானம் கொண்டுவருகிறார்.

காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை
தமிழகத்தில் குடிநீருக்கு மட்டுமில்லாமல் காவிரியில் இருந்து வரும் தண்ணீர் மேட்டூர் அணை மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு பாசன வசதிக்கு பெரிதும் உதவியாக உள்ளது. ஆனால் கர்நாடகவில் இருந்து உரிய வகையில் தண்ணீர் எப்போதும் திறக்கப்படாத நிலையில், மேட்டூர் அணையானது வறண்டு காணப்படுகிறது. இதனால் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையானது நீடித்து வருகின்றது. இந்த நிலையில் கர்நாடகாவில் காவிரி நீரை தடுத்து மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. இதற்காக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்படும் பட்சத்தில் தமிழகத்தல் முற்றிலுமாக தண்ணீர் வழங்குவது பாதிக்கப்படும். எனவே மேகதாது அணை கட்டுவதை தடுத்த தமிழக அரசு தொடர்ந்து தடை போட்டு வருகிறது.
சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வரும் முதலமைச்சர்
அந்த வகையில் இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார். சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் மேகதாது அணை கட்டும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழியவுள்ளார். அந்த வகையில் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் ஒப்புதல் பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால், கர்நாடக அரசின் மேகதாது அணை கட்ட முயற்சிக்கு செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை முதலமைச்சர் விஜய் பதிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுக்காதீங்க
மேலும் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும், காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதால், காவிரிப்படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது என தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் ஒப்புதல் இன்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானமானது கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து கட்சி ஒத்துழைப்போடு தீர்மானம்
இது மட்டுமில்லாமல் கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் வலியுறுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் அனைத்து கட்சி ஒத்துழைப்போடு நாளை தீர்மானத்தை இயற்ற தமிழக முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















