மேலும் அறிய

CM Stalin: ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின்: உற்சாக வரவேற்பு: ஜோகோவிச்சுடனும் ஒரு க்ளிக்!

முதலமைச்சர் ஸ்டாலின் 8 நாட்கள் அரசுமுறை பயணமாக கடந்த 27ஆம் தேதி ஸ்பெயினுக்கு புறப்பட்டார். இந்நிலையில் ஸ்பெயின் சென்றுள்ள அவரை தூதர் தினேஷ் கே. பட்நாயக் வரவேற்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாட்கள் அரசுமுறை பயணமாக ஸ்பெயினுக்கு சென்றுள்ளார். அங்கு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடுக்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை ஸ்பெயின் - தலைநகர் மேட்ரில் தூதர் தினேஷ் கே. பட்நாயக் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முதலமைச்சர் ஸ்டாலின் உடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளார். 

ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சை (Novak Djokovic) சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தனது அதிகாரப் பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சர்ப்ரைஸ் இன் தி ஸ்கைஸ் என பதிவிட்டுள்ளார். அதாவது நடுவானில் நிகழ்ந்த ஆச்சரியம் என தெரிவித்துள்ளார்.  ஸ்பெயினுக்கு விமானத்தில் செல்லும்போது முதலமைச்சர் ஸ்டாலின் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை  சந்தித்துள்ளார். 

ஸ்பெயின் செல்வதற்கு முன்னதாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஏட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக அமைந்தது. தற்பொழுது நான் ஸ்பெயின் செல்கிறேன் வருகின்ற ஏழாம் தேதி நான் மீண்டும் தமிழ்நாடு திரும்புவேன். அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக முடிந்தது. 

என்னுடைய கடந்த கால வெளிநாட்டு பயணிகளை பொறுத்தவரை, கடந்த 2022 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று இருந்தேன். அந்தப் பயணத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கக்கூடிய 6100 கோடி முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதே போன்று 2023 ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்ற பொழுது 2000 திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கக்கூடிய, 1342 முதலீடு கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த,  முதலீட்டாளர்கள் வணிக அமைப்புகள் தொழில் முனைவோர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் நிலவுகிற சாதகமான சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்ற சிறப்பு அம்சங்களையும் எடுத்துக் கூறி இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு தான் சிறந்த இடம் என எடுத்துக் கூறி, அந்த நாட்டு முதலீட்டாளர்களை எடுத்துரைக்க உள்ளேன். 

இந்தப் பயணத்தின் பொழுது, ரோ.கா, கேஸ்டம் உட்பட சில பெரும் தொழில் நிறுவனங்களிடமும், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற முதலீட்டு நிறுவனத்துடன் நேரடி பேச்சு வார்த்தைகளில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த பயணத்தின் மூலமாக ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்த்து, அந்த நாடுகளில் இருந்தும் முதலீடுகளை பெருமளவு ஈர்க்க முடியும் என நம்புகிறேன். எனவே உங்கள் அனைவருடைய வாழ்த்துகளுடன் இந்த பயணம் வெற்றி பெற வேண்டுமென நினைக்கின்றேன். எவ்வளவு முதலீடு என்பதை தமிழ்நாட்டிற்கு திரும்பி வரும்போது தெரிவிப்பதாகவும் பேசினார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget