யார் அந்த சார்? ஆதாரம் இருக்கா? - முதல் முறையாக பேரவையில் லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் போராட்டம் நடத்திய பெண்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாகவும் பாமகவின் ஜி.கே.மணி பேரவையில் கேள்வி எழுப்பினார்.
ஆளுங்கட்சியாக இருந்தாலும் திமுகவினர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து கட்சியினருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பேசிய பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ காந்தி பாலியல் வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பேசினார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோல், பல்கலைக்கழகங்களுக்கு பொறுப்பு ஆளுநர்தான் என மதிமுக எம்.எல்.ஏ பேசினார்.
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் போராட்டம் நடத்திய பெண்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாகவும் பாமகவின் ஜி.கே.மணி பேரவையில் கேள்வி எழுப்பினார். மேலும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். போராட்டங்களுக்கு காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். எல்லா இடங்களிலும் போராட்டங்கள் நடத்த முடியாது. போராட்டம் நடத்த சில இடங்கள் இருக்கின்றன. அனுமதி இன்றி போராட்டங்களை நடத்தியவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்யப்படுகின்றன. கைது நடவடிக்கை மேற்கொள்ளப் படுகின்றன. பல்வேறு இடங்களில் அனுமதியோடு போராட்டங்கள் நடைபெறுகின்றன. திடீரென அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறும்போது வழக்கு போடப்படுகின்றன.
திமுகவினரும் அனுமதி இன்றி போராட்டங்கள் நடத்தியுள்ளனர். ஆளுங்கட்சியாக இருந்தாலும் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை பாகுபாடு காட்டுவதில்லை” எனத் தெரிவித்தார்.
அண்ணா பல்கலை விவகாரம் குறித்து பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “மாணவி பாதிக்கபப்ட்ட விவகாரத்தை அரசியல் ஆதாரத்திற்காக ஒருவர் பேசினார். குற்றம் தொடர்பான ஆதாஅரங்களை திரட்டிய பிறகும் அரசை குறை கூறுவது அரசியல் ஆதாரத்திற்கு மட்டுமே. தொழிநுட்ப கோளாறு காரணமாக எஃப்.ஐ.ஆர் வெளியானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழகத்தின் பெயரை சொல்லி அண்ணாவிற்கு களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை. அந்த சார் யாராக இருந்தாலும் புலானாய்வு குழுவிடம் ஆதாரத்தை கொடுங்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சியை கொண்டே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். குற்றவாளி யாராக இருந்தாலும் தயவு தாட்சன்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். அரசை பாராட்ட மனம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. வீண் பழி சுமத்த வேண்டாம். வீண் அரசியல், மலிவான அரசியலை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். வீண் அரசியலை தவிர்த்தாலே பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
பொள்ளாச்சி சம்பவத்தில் என்ன செய்தீர்கல் என நினைத்து பாருங்கள். அதன்பிறகு தான் தொடர்ந்து பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரன்கேறின. பெண்களில் பாதுகாவலர்களாக பேசுபவர்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள். அதிமுக அரசு அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிபிஐ வந்தபிற்குதான் பல உண்மைகள் வெளிவந்தன.
பெண்களின் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம் என மக்களுக்கு நன்றாகத் தெரியும். பொள்ளாச்சி சம்பவத்தில் அன்றைய முதலமைச்சர் சார் என்ன செய்து கொண்டிருந்தார். மீண்டும் மீண்டு சொல்கிறேன் பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுகவுக்கு பங்கு இருக்கிறது. அதிமுக ஆட்சியில் 100 சார்கள் இருக்கின்றனர். பொல்லாத ஆட்சியின் சாட்சியாக பொள்ளாச்சி உள்ளது” என குறிப்பிட்டார்.
இதை கேட்டதும் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் முதலமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.