மேலும் அறிய

CM Stalin: ”பேரிடரிலும் அரசியல், பங்களா வாசல் திறக்க காத்திருக்கவில்லை” - எதிர்க்கட்சிகளை தாக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

CM Stalin: பேரிடரிலும் அரசியல் செய்யும் குணம் படைத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், மக்கள் நலன் காக்க சிந்தித்து செயல்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், “பேரிடரில் மீண்டோம்… சேலத்தில் சந்திப்போம்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.  வரலாறு காணாத கனமழையை மிக்ஜாம் புயலின் எதிரொலியாக அல்ல.. அல்ல.. இடியொலியாக எதிர்கொண்டன சென்னையும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களும்!

பேரிடர் மீட்பு பணிகள்:

எத்தகைய இடர் வந்தாலும் அதிலிருந்து மக்களைக் காப்பதில் அக்கறையும் பொறுப்பும் கொண்ட ஆட்சியை நடத்தி வருகின்ற காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன் சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதிகள் பலவற்றிலும் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டு, மற்ற இடங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்தான் மிக்ஜாம் புயலையும் கனமழையையும் எதிர்கொள்ள நேரிட்டது. 

24X7 என்ற முறையில் பகல்-இரவு பாராது செயல்பட்ட இந்த வார் ரூமுக்கு உதவி கேட்டு வந்த மொத்த கோரிக்கைகள் 5 ஆயிரத்து 689 ஆகும். இதில் கர்ப்பிணிப் பெண்கள், அவசர சிகிச்சை வேண்டியோர், மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். இவர்கள் உள்பட 4 ஆயிரத்து 266 கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் செய்யப்பட்டுள்ளன. மொத்த கோரிக்கைகளில் 74.9% அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன. 

பங்களா கதவு திறக்க காத்திருக்கவில்லை:

இதுபோலவே கழகத்தின் ஒவ்வொரு அணி சார்பிலும் உதவிக்கரம் நீண்ட காரணத்தால், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் விரைந்து இயல்பு நிலை திரும்பியது. விமர்சனம் செய்வதற்கும் வீண்பழி சுமத்துவதற்கும் எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டினாலும், மக்களின் துயர் துடைக்க அவர்கள் முன்வரவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோதும் திராவிட முன்னேற்றக் கழகம் 2015 வெள்ள பாதிப்பிலும், கொரோனா பேரிடரில் ஒன்றிணைவோம் வா என்ற பெயரிலும் மக்களின் துயரைத் துடைத்தது. ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் தி.மு.கழகத்தினர்தான் மிக்ஜாம் கனமழை வெள்ள பாதிப்பில் மக்களின் துயர் துடைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது, மக்களின் கோரிக்கைகள் உடனடியாக செவி மடுக்கப்படாதது போன்ற தகவல்களையும் கவனித்து, அங்கும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆவன செய்தது உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசு. ஆட்சியை வழங்கிய மக்களிடம் பொறுப்புடன் நடந்துகொள்ளும் தன்மை கொண்டது இந்த அரசு. டி.வியில் பார்த்துதான் விவரம் தெரிந்துகொண்டேன் என்றோ, பங்களா வீட்டின் வாசலில் உள்ள பெரிய இரும்புக் கதவு திறக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்றோ முந்தைய ஆட்சியாளர்களின் நிலைமை இன்றில்லை. மக்கள் பிரதிநிதிகளை மக்கள் அணுகமுடியும், கேள்வி கேட்க முடியும், நிவாரணம் பெற முடியும் என்ற ஜனநாயகப்பூர்வமான அரசு செயல்பட்டு வருகிறது. 

எதிர்கட்சிகளின் கன்னத்தில் அறை:

மிக்ஜாம் புயலின் பாதிப்புகளைப் பார்வையிட வந்த ஒன்றிய குழுவினரும், அரசியல் மாச்சரியமின்றி திராவிட மாடல் அரசின் பணிகளைப் பாராட்டியிருப்பது நம் உண்மையான உழைப்புக்கும் அக்கறையான செயல்பாடுகளுக்குமான சான்றிதழ் மட்டுமல்ல, அவதூறு பேசி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த பளார் அறை என்றால் மிகையல்ல.

பேரிடரிலும் அரசியல் செய்யும் குணம் படைத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், மக்கள் நலன் காக்க சிந்தித்து செயல்படும் அரசு, 6000 ரூபாய் நிவாரணம் அறிவித்து, அதற்கானப் பணிகளை முன்னெடுத்துள்ளது. பேரிடரில் உயிர் இழந்தவர்களுக்கான நிவாரணம், மீனவர்களுக்கான வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் கவனம் செலுத்தி அவற்றுக்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 

”சேலத்தில் சந்திப்போம்”

திராவிட மாடல் அரசின் பணிகளை பிற மாநிலங்கள் கவனிக்கின்றன. திராவிட மாடல் அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் தொடரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கொள்கையான பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் முன்னிறுத்திய மாநில உரிமைகள் காக்கப்படவேண்டும். முந்தைய அடிமை ஆட்சியாளர்களால் பறிபோன மாநில உரிமைகளை மீட்டாக வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கும், பிற மாநில மக்களுக்கும் உரிமைகள் கிடைத்திட 2024 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்களமாக நிச்சயம் அமைந்திடும். அந்தக் களத்தை நோக்கி நம்மை ஆயத்தப்படுத்திட, சேலத்தில் தம்பி உதயநிதி தலைமையில் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் டிசம்பர் 24 அன்று நடைபெறுகிறது.

பேரிடரிலிருந்து மீண்ட மக்களின் மகிழ்வான மனநிலை தொடர்ந்திட கண்டு, நம்முடைய பொறுப்புகளை உணர்ந்து, சேலத்தில் சந்திப்போம்! களம் எதுவாயிலும் கலங்காது நிற்போம்! இளைஞரணி மாநாடு வெல்லட்டும்! அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாகட்டும்! “ என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024:  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
Breaking News LIVE 18th DEC 2024: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Embed widget