1st T20I - 26 Jun 2021, Sat up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada
2nd T20I - 27 Jun 2021, Sun up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada

தமிழை இந்திய அரசின் ஆட்சி மொழி, அலுவல் மொழியாக மாற்றுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

இந்திய அரசின் ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும் தமிழ்மொழியை மாற்ற பாடுபடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறியுள்ளார்.

FOLLOW US: 

உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாக தமிழ்மொழி திகழ்ந்து வருகிறது. 2004-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியின்போது தமிழ்மொழி இதே தேதியில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தீவிரமாக மத்திய அரசை வலியுறுத்தினார். இந்த நிலையில், தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்து 17 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, இதை நினைவுகூரும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்க்கொடியை கையில் ஏந்தி 14 வயதிலேயே தாய்மொழி காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  மொழி- இனப் போராட்ட வரலாற்றின் இன்றியமையாத சாதனைகளில் ஒன்று, நம் தமிழ்மொழிக்கு இந்திய அரசின் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்தது.

பரிதிமாற் கலைஞரில் தொடங்கி பல தமிழறிஞர்களும் 100 ஆண்டுகளாக வலியுறுத்திய செம்மொழித் தகுதி, கருணாநிதியின் முயற்சியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் வலியுறுத்தப்பட்டது. கூட்டணியின் தலைவராக இருந்த சோனியா காந்தியும், பிரதமர் பொறுப்புவகித்த மன்மோகன் சிங்கும் தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றனர். தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த 6-6-2004-ஆம் ஆண்டு வெளியானது. அதற்கான அரசாணை 12-10-2004-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.தமிழை இந்திய அரசின் ஆட்சி மொழி, அலுவல் மொழியாக மாற்றுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

உலகின் மூத்த மொழியும், திராவிட மொழிக்குடும்பத்தின் தாயாக விளங்கும் மொழியும், இலக்கிய – இலக்கண வளங்கள் கொண்ட சிறப்பான மொழியும், பழமைக்கு பழமையாய் புதுமைக்கு புதுமையாய் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, கல்வெட்டுக் காலம் முதல் கணினிக்காலம் வரை சிறப்புற்று விளங்கும் மொழியான அன்னைத் தமிழ்மொழிக்கு கருணாநிதி சூட்டிய அணிகலனே, செம்மொழித் தகுதியாகும். அந்தத் தகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் எத்திசையும் தமிழ் மணக்க, தி.மு.க. அரசு தொடர்ந்து உழைத்திடும். நமது அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி, அலுவல் மொழியாகிட உறுதியுடன் பாடுபடும்” என்று கூறப்பட்டுள்ளது. 

மத்தியில் பா.ஜ.க, ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தமிழ்மொழிக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வதற்கான கோவின் இணையதளத்தில் 9 மாநில மொழிகள் சேர்க்கப்பட்ட நிலையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, தமிழ் அறிஞர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், சேர்க்கப்பட்ட 9 மாநில மொழிகளையும் மத்திய அரசு நீக்கியது. 

மேலும் படிக்க : நான் அட்வகேட்டு, மவனே யூனிபார்ம கழட்ட வச்சுடுவேன் - போலீசாரை ஒருமையில் பேசிய பெண் வழக்கறிஞர்

Tags: tamil mk stalin Tamilnadu official language

தொடர்புடைய செய்திகள்

TN Corona Cases : தமிழ்நாட்டில் 8 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை..!

TN Corona Cases : தமிழ்நாட்டில் 8 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை..!

Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில் 8,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..

Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில் 8,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..

எழும்பூர், கொரோனா குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் முதல்வர் ஆய்வு..!

எழும்பூர், கொரோனா குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் முதல்வர் ஆய்வு..!

Petrol Diesel Price Hike : பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Petrol Diesel Price Hike : பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Finance Minister PTR : ’அவங்களுக்கு அறிவு பத்தலன்னு நினைக்கிறீங்களா?’ - பத்திரிகையாளர் சந்திப்பில் கொந்தளித்த நிதி அமைச்சர்..!

Finance Minister PTR : ’அவங்களுக்கு அறிவு பத்தலன்னு நினைக்கிறீங்களா?’ - பத்திரிகையாளர் சந்திப்பில் கொந்தளித்த நிதி அமைச்சர்..!

டாப் நியூஸ்

பிரபல கஞ்சா வியாபாரி கைது : 3 டாபர்மேன் நாய்க்குட்டிகள், 2 மொபெட் வண்டி , ஏர்கன்  பறிமுதல்..!

பிரபல கஞ்சா வியாபாரி கைது : 3 டாபர்மேன் நாய்க்குட்டிகள், 2 மொபெட் வண்டி , ஏர்கன்  பறிமுதல்..!

மயிலாடுதுறை: திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் போக்சோவில் கைது..!

மயிலாடுதுறை: திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் போக்சோவில் கைது..!

Food Delivery Drones | இனி டெலிவரி செய்பவர்களுக்கு  பதிலாக  ட்ரோன்கள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டலாம்..!

Food Delivery Drones | இனி டெலிவரி செய்பவர்களுக்கு  பதிலாக  ட்ரோன்கள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டலாம்..!

”சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை” : தந்தையர் தினத்தில் யுவன் வெளியிட்ட க்யூட் வீடியோ

”சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை” : தந்தையர் தினத்தில் யுவன் வெளியிட்ட க்யூட் வீடியோ