(Source: ECI/ABP News/ABP Majha)
Kalaignar Memorial: அண்ணா, கருணாநிதி புதுப்பிக்கப்பட்ட நினைவிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், தி.மு.க.வைத் தொடங்கியவர் அறிஞர் அண்ணாதுரை. இவரது மறைவுக்கு தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. இவர்களது நினைவிடங்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது.
அண்ணா, கருணாநிதி நினைவிடம் திறப்பு:
தமிழக அரசு சார்பில் அவர்கள் இருவரது நினைவிடங்களும் புதுப்பிக்கப்படும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அண்ணா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரது நினைவிடங்களும் புதுப்பிக்கப்படும் பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து, புதுப்பிக்கப்பட்ட அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இவர்களது இருவரின் நினைவிடங்களையும் புதுப்பிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் 39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தில் அண்ணா சிலை ஒன்றையும் திறந்து வைத்தார். பின்னர், அண்ணா நினைவிட கல்வெட்டையும் திறந்து வைத்தார். புதியதாக திறக்கப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு மலர் தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
ரஜினிகாந்த் பங்கேற்பு:
பின்னர், அங்கிருந்து பேட்டரி வாகனம் மூலமாக புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டபடி, கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றனர். அவருடன் அமைச்சர் துரைமுருகன், நடிகர் ரஜினிகாந்த் உடன் சென்றனர். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து, பின்னர், அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், சென்னை மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்களான கி.வீரமணி, வைகோ, பாலகிருஷ்ணன், திருமாவளவன் எம்.பி ஆகியோர் பங்கேற்றனர். கருணாநிதி நினைவிடத்தைச் சுற்றிலும் கருணாநிதியின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
பணியாளர்களுக்கு மரியாதை செய்த முதல்வர்:
மேலும், கருணாநிதி நினைவிட திறப்பு விழாவை முன்னிட்டு ”கருணாநிதி என்றாலே போராட்டம்தான்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். புதுப்பிக்கப்பட்ட நினைவிட திறப்பு விழாவில் நினைவிடங்கள் புதுப்பிப்பு பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள், பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அண்ணா, கருணாநிதி நினைவிட திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்றதால் காமராஜர் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த வழியே செல்லும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு வேறு பாதையில் மாற்றப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: Actor Prashanth: அது எனக்கு கஷ்டம்.. தைரியம் வேணும்.. - விஜய் குறித்து பிரசாந்த் பேசியது என்ன?
மேலும் படிக்க:என்னது பிரதமர் மோடி நெல்லையப்பர் சாமியா? - கொதித்தெழுந்த இந்து முன்னணி