100 New Buses: புதிய 100 பிஎஸ் 6 பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொடி அசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ.634.99 கோடி ரூபாயில் ஆயிரத்து 666 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு அதில் முதற்கட்டமாக, புதிதாக 100 பிஎஸ் 6 பேருந்துகள் வாங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்துக் கழகங்களில் கோவை, சேலம், திருநெல்வேலி, மதுரை மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழகங்களுக்கு மொத்தம் 100 புதிய பிஎஸ் 6 பேருந்துகளை முதலமைச்சர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ.634.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 666 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு அதில் முதற்கட்டமாக, புதிதாக 100 பிஎஸ் 6 பேருந்துகள் வாங்கப்பட்டு, இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 1666 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இதன் முதற்கட்டமாக 100 புதிய பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதாவது ஜனவரி 20ஆம் தேதி சென்னை, மாநகர போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், பேருந்தின் சேஸ் நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த பேருந்துகள் மட்டும் இல்லாமல் நீலகிரி மாவட்டத்திற்கென மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டது.
"போக்குவரத்து உட்கட்டமைப்பில் உயரும் தமிழ்நாடு..."
— TN DIPR (@TNDIPRNEWS) January 20, 2024
100 புதிய BS-VI பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த மாண்புமிகு முதல்வர்...#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @sivasankar1ss @PKSekarbabu @PriyarajanDMK @Chief_Secy_TN pic.twitter.com/nFmm4CUF5B
இன்று மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்த 100 பேருந்துகளில் 40 பேருந்துகள் கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கும், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 40 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10 பேருந்துகளும், திருநெல்வேலி மற்றும் மதுரை போக்குவரத்துக் கழகத்திற்கு தலா 5 பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மத்திய போக்குவரத்து பணிமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.