இ-பதிவு போதும் என அறிவித்தால், இ பாஸ் கட்டாயம் என செய்தி வெளியாகிறது - முதல்வர் ஸ்டாலின்
செய்தியை முந்தித் தருகிறோம் எனத் தவறான செய்தியைப் போட்டுவிடவேண்டாம். - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசினார். அப்போது,"புதிய அரசு கொரோனா விவகாரத்தில் உண்மையான தகவல்களைத் தரவேண்டும் என்கிற உறுதியோடு இருக்கிறோம். அதனால் செய்தியை முந்தித் தருகிறோம் எனத் தவறான செய்தியைப் போட்டுவிடவேண்டாம்.தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூல் என புகார் வரவே, கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது; ஆனால்,செய்தித் தொலைக்காட்சிகளில் 108 ஆம்புலன்ஸுக்கு கட்டணம் என செய்தி பரவுகிறது. ஆவின் பால் விலை லிட்டருக்கு ₹3 குறைக்கப்பட்டது; ஆனால், ₹6 விலை உயர்த்தி ₹3 குறைக்கப்படுவதாக செய்தி பரவுகிறது. அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள். இது அரசியல் செய்தியல்ல.
பிற மாவட்டங்களுக்கு பயணிக்க இ-பதிவு மட்டும் போதும் என்று அரசு அறிவித்தது; அனுமதிக்கு காத்திருக்காமல் வெறுமனே பதிவு செய்துவிட்டு பயணிக்கலாம்; ஆனால், இபாஸ் கட்டாயம் என்று செய்தி வெளியாகிறது. இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லுங்கள்; அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள்" என செய்தியாளர்களிடம் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.