அழகு முத்துக்கோனின் வாழ்வும் போராட்டமும் என்றும் புகழ்மங்காது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..!
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மூத்த அமைச்சர்களான பொன்முடி, ராஜகண்ணப்பன், சேகர் பாபு தங்களது மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அழகு முத்துக்கோனின் வாழ்வும் போராட்டமும் என்றும் புகழ்மங்காது ஒளிவீசிடும் என புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், “தமிழ்நிலத்தின் தலைவணங்கா வீரத்துக்கும் தலைசான்ற தியாகத்துக்கும் தன்னிகரற்ற அடையாளமாக விளங்கும் மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள்.
தமிழ்நிலத்தின் தலைவணங்கா வீரத்துக்கும் தலைசான்ற தியாகத்துக்கும் தன்னிகரற்ற அடையாளமாக விளங்கும் மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள்.
— M.K.Stalin (@mkstalin) July 11, 2023
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளும் கிளர்ந்தெழுவதற்கு முன்பே அதைச் செய்து, விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா… pic.twitter.com/FZPZSdtfA3
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளும் கிளர்ந்தெழுவதற்கு முன்பே அதைச் செய்து, விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அழகு முத்துக்கோனின் வாழ்வும் போராட்டமும் என்றும் புகழ்மங்காது ஒளிவீசிடும்!” என பதிவிட்டுள்ளார்.
யார் இந்த சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன்..?
1759 ம் ஆண்டு அழகுமுத்து கோன் நடத்திய போர்தான் ஆங்கிலேய அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராக பார்க்கப்படுகிறது. மன்னர் அழகுமுத்துக்கோனுக்கும், ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மூத்த மகனாக பிறந்தவர் வீர அழகுமுத்துக்கோன். இவரது தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் மரணம் அடையவே, வீரஅழகுமுத்துக்கோன் தன்னுடைய 22ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார்.
இந்திய வரலாற்றில் முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுத்தும் போராடியவர் வீர அழகுமுத்துக்கோன். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய ஜெனரல் மருதநாயகம் பிள்ளை அனுப்பி வைத்தது. அழகுமுத்துக்கோனுக்கும், மருதநாயகம் பிள்ளைக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்தில் பீரங்கி முனையில் மார்பில் சுடப்பட்டு மரணம் அடைந்தனர்.
ஆண்டுதோறும் மரியாதை செலுத்தும் தமிழ்நாடு அரசு:
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் ஜுலை11ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கடந்த 2012ம் ஆண்டு வீரன் அழகுமுத்துக்கோன் குறித்த ஆவணப்படம் ஒன்று தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டது. இதேபோல் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி மத்திய அரசு சார்பில் மதுரையில் அழகுமுத்துக்கோன் தபால் தலை ஒன்று வெளியிடப்பட்டது.