CM Visit To Delhi: இன்று மாலை டெல்லி செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின்! பிரதமரை சந்திப்பதின் பின்னணி என்ன?
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபா மோடி இன்று அதிகாலை காலமானார். இரங்கல் தெரிவிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்கிறார்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபா மோடி இன்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் ஹீராபென் (100) இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஹீராபென் இன்று (டிச.30) அதிகாலை உயிரிழந்தார்.
பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " நூறாண்டு வாழ்ந்த ஒருவர் கடவுளின் காலடியில் உள்ளார்" என்று எழுதினார். தனது தாயார் படத்தைப் பகிர்ந்துகொண்ட பிரதமர், “ஒரு துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளம் மற்றும் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் என் தாயிடம் உணர்ந்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி காலை 7.30 மணியளவில் அகமதாபாத் சென்றடைந்தார். கொல்கத்தாவில்: ஹவுரா, வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் மோடி. பின் நமாமி கங்கேயின் கீழ், தேசிய கங்கா கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் அகமதாபாதிலிருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்பார் என அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் கடந்த புதன்கிழமை மதியம் தனது தாயாரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தாயை இழந்து வாடும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
”அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தங்கள் அன்புத்தாயார் ஹீராபா அவர்களுடன் தாங்கள் கொண்டிருந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை அனைவருமே அறிவோம். அன்னையின் இழப்பினால் உண்டாகும் வலி என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாதது. தங்கள் தாயாரின் இழப்பினால் நான் அடைந்துள்ள துயரை விவரிக்கச் சொற்கள் இன்றித் தவிக்கிறேன்.
Dear Prime Minister @NarendraModi,
— M.K.Stalin (@mkstalin) December 30, 2022
We all know the emotional bond you had with your beloved mother Hiraba. The grief of losing one's mother is too hard to bear for anyone. I am deeply saddened and no words can describe how sorry I am for your loss. (1/2)
துயர்மிகு இந்நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். தாயாருடன் தாங்கள் கொண்டிருந்த அழகிய நினைவுகளில் அமைதியும் இளைப்பாறுதலும் பெறுவீர்களாக” எனத் தெரிவித்துள்ளார்.
Sending my deepest sympathy and heartfelt condolences in this hour of grief. May you find peace & comfort in the memories you shared with your mom. (2/2)
— M.K.Stalin (@mkstalin) December 30, 2022
மேலும் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரங்கல் தெரிவிக்க இன்று மாலை டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி குஜராத் செல்கிறார்.