CM MK Stalin Speech: பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், “சில முக்கிய கொள்கைகளை வகுக்கும் பணி திட்டக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது. கட்டணமில்லா பயணச் சலுகை மூலம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர் என்பது திட்டக்குழு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
நான் முதல்வன் திட்டம் மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் திறன்மிகுந்த மாணவர்களாக உருவாகி வருகின்றனர். செலவினத்தின் அடிப்படையில் இல்லாமல் கிடைக்கும் பயன்களின் அடிப்படையில் திட்டங்களை அளவிட வேண்டும்” என்று கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

