மேலும் அறிய

Kanini Tamil Computing Award: ஒரு சவரன் தங்கம், ரூ.2 லட்சம்...முதலமைச்சர்‌ கணினித்‌ தமிழ்‌ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?

விருது பெறுபவருக்கு விருதுத்‌ தொகையாக ரூபாய்‌ 2 இலட்சம்‌, ஒரு சவரன்‌ தங்கப் பதக்கம்‌ மற்றும்‌ தகுதியுரை வழங்கப்படுகிறது.

முதலமைச்சர்‌ கணினித்‌ தமிழ்‌ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை அழைப்பு விடுத்துள்ளது. விருது பெறுபவருக்கு விருதுத்‌ தொகையாக ரூபாய்‌ 2 இலட்சம்‌, ஒரு சவரன்‌ தங்கப்பதக்கம்‌ மற்றும்‌ தகுதியுரை வழங்கப்பட்டு வருகிறது.

பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புக்களைக்‌ கொண்டு, சீரிளமையோடு இயங்கி வரும்‌ தமிழுக்கும்‌, தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத்‌ தொண்டாற்றிடும்‌ தமிழ்த்தாயின்‌ திருத்தொண்டர்களுக்குத்‌ தமிழால்‌ விளங்கிடும்‌ தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும்‌ சிறப்புகளையும்‌ அளித்து, அவர்தம்‌ தொண்டுக்கும்‌ தமிழுக்கும்‌ பெருமை சேர்த்து வருகின்றது.

தகவல்‌ தொழில்‌ நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகடுமலாம்‌ கணினி வழித்‌ தமிழ்‌ மொழி பரவச்‌ செய்யும்‌ வகையில்‌ கணினித்‌ தமிழ்‌ வளர்ச்சிக்காக சிறந்த தமிழ்‌ மென்பொருள்‌ உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை வாயிலாக முதலமைச்சர்‌ கணினித்‌ தமிழ்‌ விருது என்ற பெயரில்‌ விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருதுத்‌ தொகையாக ரூபாய்‌ 2 இலட்சம்‌, ஒரு சவரன்‌ தங்கப் பதக்கம்‌ மற்றும்‌ தகுதியுரை வழங்கப்படுகிறது.

இதுவரை மென்தமிழ்‌ (தமிழ்ச்‌ சொல்லாளர்‌) (2013), விருபா - வளர்தமிழ்‌ நிகண்டு (2014), விவசாயம்‌ (2015),  https://www.tamilpulavar.org/ (2016), பிரிபொறி (2017), தமிழ்‌ உரைவழி பேச்சு உருவாக்கி (2018), 'வாணி தமிழ்ப்‌ பிழைத்‌ திருத்தம்‌ (2019), 'செவ்வியல்‌ இலக்கண - இலக்கியம்‌' (2020), வட்டெழுத்து (2021), 'தமிழ்ப்பேச்சு! மேம்படுத்திய பதிப்பு (2022) உள்ளிட்ட மென்பொருள்களுக்கு முதலமைச்சர்‌ கணினித்‌ தமிழ்‌ விருதுகள்‌ வழங்கப்பட்டுள்ளன.

அவ்வகையில்‌ 2023ஆம்‌ ஆண்டுக்குரிய முதலமைச்சர்‌ கணினித்‌ தமிழ்‌ விருதுக்கு தனியர்‌ மற்றும்‌  நிறுவனத்திடம் இருந்து, தமிழ்‌ வளர்ச்சிக்கான மென்பொருள்கள்‌ / செயலிகள்‌ வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள்‌ 2020, 2021, 2022ஆம்‌ ஆண்டுகளில்‌ தயாரிக்கப்பட்டதாக இருத்தல்‌ வேண்டும்‌. இவ்விருதுக்குரிய விண்ணப்பம்‌ மற்றும்‌ விதிமுறைகளைத்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தின்‌ வழியாகவோ இலவசமாகப்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.

இதுதவிர, தமிழ்‌ வளர்ச்சி இயக்குநர்‌, தமிழ்‌ வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர்‌, சென்னை - 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல்‌ வாயிலாகவோ 31.12.2023 ஆம்‌ நாளுக்குள்‌ விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டுகின்றோம்‌. தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள்‌ அமைதல் விரும்பத்தக்கது. மேற்கண்ட இணையதளத்திலேயே போதுமான விளக்கங்கள்‌ தரப்பட்‌ டுள்ளன.

கூடுதல்‌ விவரமறிய விரும்புவோர்‌ 044 - 28190412, 044 – 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

உரிய நாளுக்குள்‌, அதாவது 31.12.2023-க்குள் பெறப்படும்‌ விண்ணப்பங்களே ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌ என்றும் தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

விண்ணப்பப் படிவத்தைப் பெற: https://drive.google.com/file/d/14-Dr61LeogBb2o0EkE87gt5iMr729aCS/view

என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற்றோர் பட்டியல்

1.

2013

முனைவர் ந.தெய்வசுந்தரம்

2.

2014

து.குமரேசன்

3.

2015

செ. முரளி (செல்வ முரளி)

4.

2016

அல்டிமேட் மென்பொருள் தீர்வகம்

5.

2017

வை.மதன் கார்க்கி

6.

2018

முனைவர் த.நாகராசன்

7.

2019

சே.இராஜாராமன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget