மேலும் அறிய

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான பொதுநல வழக்கு: மலினமானது என நீதிபதிகள் கருத்து

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் ஆலோசனைக் குழுவுக்கு முதல்வர் தலைவராக இருப்பார் என்ற தகவலை எதிர்த்து வழக்கறிஞர் ஸ்ரீதரன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிகளின் ஆலோசனைக் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைவராக இருப்பார் என்று தகவல்கள் வெளியான நிலையில் அதனை எதிர்த்து வழக்கறிஞர் ஸ்ரீதரன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

வழக்கறிஞர் ஸ்ரீதரன் தொடர்ந்த வழக்கில்,  "இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிகளின் ஆலோசனைக் குழுவுக்கு  முதல்வர் ஸ்டாலின் தலைவராக இருக்க வேண்டுமென்றால் அவர் இந்துக் கடவுளின் முன் தான் இந்து மதத்தைப் பின்பற்றுவதாக உறுதிமொழி ஏற்க வேண்டும்.

ஏனெனில் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் இத்தகைய உறுதிமொழியை எடுப்பது கட்டாயமாக இருப்பதால் அதனை முதல்வர் ஸ்டாலினும் பின்பற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த மனு குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி. ஆதிகேசவலு விசாரித்தனர். அப்போது அவர்கள், "இது மிகவும் கோளாறான ஒரு மனு. மலினமான புத்தியுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்முடிவுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு" என்று கடுமையாக விமர்சித்தனர்.

குழு அமைக்கலாமா? அதிகாரி சொல்வதென்ன?

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிகளின் ஆலோசனைக் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைவராக இருப்பது, குறித்து அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிகளுக்கென ஆலோசனைக் குழு அமைப்பது அதன் சட்டப்பிரிவு 7ன் கீழ் சாத்தியமே. இந்தக் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைவராகவும், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு துணைத் தலைவராகவும் இருப்பார்கள் என்று தெரிகிறது.

இந்தக் குழுவில் எத்தனை அலுவல் சாராத உறுப்பினர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஒருவராவது பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருத்தல் அவசியம். இது போன்றதொரு குழு கடந்த 2012ல் அமைக்கப்பட்டது. அதன் ஆயுட்காலம் 2015ல் முடிவடைந்தது. அதன் அலுவல் சாராத உறுப்பினர்களாக, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் அந்தவன் ஆசிரமம், திருவாதிரை ஆதீனம் ஆகியோரும் சில தொழிலதிபதிர்களும் இருந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், இந்தக் குழுவானது கோயில் நிலங்களை, சொத்துகளை வேறு விதத்தில் நற்காரியங்களுக்காக பயன்படுத்தவும் அதிகாரம் இருக்கிறது என்று கூறினார்.

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டக் கூடிய அனைத்து கோயில்களுமே முதல்வர் தலைமையில் அமையுள்ள குழுவின் கீழ் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்தைக் கடக்கும் கோயில்களின் பட்டியலில் 331 கோயில்கள் உள்ளன. அதேபோல், ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கும் மேல் வருமானம் வரும் கோயில்கள் 47 உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
Embed widget