chennai : “என் கணவனின் காதலி இங்கே வர வேண்டும்” - காஸ் சிலிண்டரை திறந்து தற்கொலைக்கு முயன்ற மனைவி..!
சென்னை அருகே கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை அறிந்த மனைவி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை அறிந்த மனைவி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மணலி ஈ.வே.ரா. பெரியார் தெருவை சேர்ந்தவர் 45 வயதான ராஜேஷ் கண்ணா. சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா தேவி (40). இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மகன், மகள் உள்ளனர். ரேணுகாதேவி வீட்டிலேயே பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையில், ராஜேஷ் கண்ணா வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக ரேணுகா தேவிக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம் வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்பு ராஜேஷ் கண்ணா வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு ரேணுகாதேவி வீட்டில் இருந்த காஸ் சிலிண்டரை திறந்து விட்டு, வீட்டை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார்.
பின்னர் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கணவனுக்கு செல்போனில் மிரட்டினார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி மணலி போலீசார், 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்களுடன் விரைந்து வந்து ரேணுகாதேவியிடம் சமாதானம் பேசினர். அதற்கு ரேணுகா தேவி, 'எனது கணவன் ராஜேஷ்கண்ணாவுக்கு ஜெயா என்ற பெண்ணுடன் தொடர்பு உள்ளது. அந்த பெண் இங்கே வர வேண்டும். அவர்களுக்கு முன்னால் நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும். இதுதான் எனது விருப்பம்' என கூறினார்.
இதனால் போலீசார் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அப்பகுதி முழுவதும் மின்சாரத்தையும் துண்டித்தனர். பின்னர் சுமார் 5 மணி நேரம் ரேணுகாதேவி கதவை திறக்கவில்லை. இதனால் போலீசார் பலவந்தமாக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று ரேணுகாதேவியை மீட்க திட்டமிட்டனர். ஆனால் இதை தெரிந்துகொண்ட ரேணுகாதேவி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக எச்சரித்தார்.
இதனிடையே, மாநகர காவல் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து வந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கதவை உடைத்து அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து தீப்பற்றாத திரவத்தை வீட்டுக்குள் பீய்ச்சியடித்து ரேணுகா தேவியை பத்திரமாக மீட்டனர். அப்போது ரேணுகா தேவி மயங்கி விழுந்ததால் அவரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் 4 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்