மேலும் அறிய

TN weather: வீட்டுக்கு சீக்கிரம் கிளம்புங்க! - சென்னையில் பொதபொதனு கொட்டப்போகும் மழை; மக்களே அலர்ட்

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னையில் இன்று இரவு  இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

 

25-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

26-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

27-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

28-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் சுன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

29-06-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

30-06-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (24-06-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/ இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (25-06-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/ இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39' செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

24-06-2026 முதல் 26-06-2026 வரை: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
Viral Video: ஷாக்கிங் வீடியோ! இப்படியா பண்ணுவீங்க? பள்ளி மாணவர்களை அந்த வேலையை செய்ய வைத்த அவலம்
ஷாக்கிங் வீடியோ! இப்படியா பண்ணுவீங்க? பள்ளி மாணவர்களை அந்த வேலையை செய்ய வைத்த அவலம்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Best Anti-Theft Cars : ’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ உங்களிடம் இந்த கார்கள் இருக்கிறதா..?
’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ இதுதான் பயத்திற்கு காரணம்..!
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Embed widget