மேலும் அறிய

Chennai : தோண்டப்பட்ட மழைநீர் வடிகாலில் தவறி விழுந்த இளம் பத்திரிகையாளர் உயிரிழப்பு - சென்னையில் சோகம்

காசி திரையரங்கம் அருகே மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தனியார் தொலைகாட்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்

வடகிழக்கு பருவமழை  இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், சென்னையில்  மழைநீர் வடிகால் திட்டத்துக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காசி திரையரங்கம் அருகே மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தனியார் தொலைகாட்சி நிறுவனத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்த 24 வயதான முத்துகிருஷ்ணன் தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் பல்வேறு பிரிவுகளாக பல ஆயிரம்  கோடி மதிப்பீட்டில் மழைநீர் மற்றும் வெள்ளத்தடுப்பு கால்வாய் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அவற்றில் பல பணிகள் நீண்டகால பணிகள் என்பதால், அவற்றின் பணிகள் உடனடியாக முடியாது. அந்த பணிகள் இப்போது நிறைவடையாததால் நகரப்பகுதிகளில் மழை நீர் வடிவதில் அமைக்கும் பணியில் பெரிய சிக்கல்கள் ஏற்படாது. ஆனால், மாநகரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்கப்பட வேண்டிய சூழலில் உள்ளது. அதனால் அவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தானர்.

பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் தற்போது பெய்யும் சிறு மழைக்கே சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் தேங்கி, வெள்ளம் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.  இந்த சூழலை உணர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சென்னையில் 90 முதல் 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் ஆய்விற்கு பின்  கூறியுள்ளார்.  ஆனால், பருவமழைக்குள்ளாக இந்தப் பணிகளை நிறைவு செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பணிகள் நடைபெறும் பகுதி வழியாக செல்லும் மக்கள் பல்வேறு விபத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் கடும் சிரம்மத்திற்கு மத்தியில் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர். இதனால் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னை ஈக்காட்டுத்தாங்களில் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த 24 வயதான முத்துகிருஷ்ணன் பள்ளத்தில் விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில்  தவறி விழுந்த இடத்தில் பணியாளர்கள் கூடுதல் தடுப்புகளை வைக்க வேண்டும் மேலும் அதிகமாக மக்கள் பயணிக்கும் இடங்களில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் பணிகள் நடைபெற்ற இடங்களை தவிர்த்து தேவையில்லாத இடங்களில் இருக்கும் பள்ளங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபோன்ற விபத்துகள் இனி நடைபெறாமல் இருக்க கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க : விழுப்புரம்: வாலிபரிடம் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள்: பறிமுதல் செய்த போலீசார்!

தலைப்பு செய்திகள்

காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Embed widget