மேலும் அறிய

கொளுத்தும் கோடை வெயிலில் இப்படி ஒரு செய்தி...! 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை அறிவிப்பு

தமிழகத்தில் நேற்றைய தினம் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியது

தமிழகத்தில் நேற்றைய தினம் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கிய நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கரூர் மற்றும் திண்டுக்கல் காமாட்சிபுரத்தில் தலா 9 செ.மீ அளவுக்கு மழை பதிவான நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை தமிழகத்தில் தொடரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், இடி, மின்னல் சமயத்தில் தரை காற்று மணிக்கு 40 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி,  திண்டுக்கல், ஈரோடு,  கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம்,  தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07.05.2022 முதல் 09.05.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  பாலவிதிதி (கரூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்) தலா 9, தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 8, செட்டிகுளம் (பெரம்பலூர்) 6, பாடலூர் (பெரம்பலூர்), திருச்சி டவுன் (திருச்சி), திருப்பூர் கலெக்டர் அலுவலகம் (திருப்பூர்) தலா 5, கொடுமுடி (ஈரோடு), மணப்பாறை (திருச்சி), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), மானாமதுரை (சிவகங்கை), திருப்பூர் (திருப்பூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), ஓசூர் (கிருஷ்ணகிரி), ஊத்துக்குளி (திருப்பூர்), போடிநாயக்கனூர் (தேனி) தலா 4, கூடலூர் பஜார் (நீலகிரி), சமயபுரம் (திருச்சி), கடவூர் (கரூர்), பொள்ளாச்சி (கோவை), கரூர் (கரூர்), சிவகங்கை (சிவகங்கை), ஆம்பூர் (திருப்பத்தூர்), கயத்தாறு (தூத்துக்குடி), பல்லடம் (திருப்பூர்), துறையூர் (திருச்சி) , வேடசந்தூர் (திண்டுக்கல்), மேலாளத்தூர் (வேலூர்), தம்மம்பட்டி (சேலம்), பொன்மலை (திருச்சி) தலா 3, மேட்டுப்பட்டி (மதுரை), அரவக்குறிச்சி (கரூர்), பூண்டி (திருவள்ளூர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), காங்கேயம் (திருப்பூர்), கோவில்பட்டி (திருச்சி), கடம்பூர் (தூத்துக்குடி), சூலூர் (கோவை), மணியாச்சி (தூத்துக்குடி), எட்டயபுரம் (தூத்துக்குடி), பெரம்பலூர் (பெரம்பலூர்), எருமப்பட்டி (நாமக்கல்), குன்னூர் PTO (நீலகிரி), சோழவந்தான் (மதுரை), குடியாத்தம் (வேலூர்), அமராவதி அணை (திருப்பூர்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), திருச்சி AP (திருச்சி), இலுப்பூர் (புதுக்கோட்டை), மணிமுத்தாறு (திருநெல்வேலி), மோகனூர் (நாமக்கல்), மருங்காபுரி (திருச்சி), தேவாலா (நீலகிரி) தலா 2, தளி (கிருஷ்ணகிரி), அன்னவாசல் (புதுக்கோட்டை), பஞ்சப்பட்டி (கரூர்), போளூர் (திருவண்ணாமலை), திருவாரூர் (திருவாரூர்), அரண்மனைப்புதூர் (தேனி), பேரையூர் (மதுரை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), பொன்னமராவதி (புதுக்கோட்டை), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), சூரலக்கோடு (கன்னியாகுமரி), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), ராசிபுரம் (நாமக்கல்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), கொடைக்கானல் (திண்டுக்கல்), நாமக்கல் (நாமக்கல் (நாமக்கல்),  தாத்தையங்கார்பேட்டை (திருச்சி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), தேக்கடி (தேனி), பெருந்துறை (ஈரோடு), ராஜபாளையம் (விருதுநகர்), சேந்தமங்கலம் (நாமக்கல்), உதகமண்டலம் (நீலகிரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), தல்லாகுளம் (மதுரை), ஆலங்காயம் (திருப்பத்தூர்) , கோவில்பட்டி (தூத்துக்குடி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), குன்னூர் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), கரூர் பரமத்தி (கரூர்), திருவாரூர் தாலுகா அலுவலகம் (திருவாரூர்) தலா 1.

குறிப்பு: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இப்பகுதிகளில் 06-ம் தேதி ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.  இது வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48  மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை :   

05.05.2022: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

06.05.2022: அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் மற்றும்  மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

07.05.2022: ,  மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08.05.2022, 09.05.2022:,  மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
சென்னை ; காரில் கடத்தி வரப்பட்ட 265 கிலோ புகையிலை !! அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்
சென்னை ; காரில் கடத்தி வரப்பட்ட 265 கிலோ புகையிலை !! அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Embed widget