மேலும் அறிய

Tamilnadu Rain: 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம்  பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, சேலம், ஈரோடு, வேலூர், தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயமுத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 

19.07.2021: கோயமுத்தூர், தேனி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 

20.07.2021: கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.


Tamilnadu Rain: 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

21.07.2021, 22.07.2021: கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்  பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்): 

செய்யார் (திருவண்ணாமலை), சூலகிரி (கிருஷ்ணகிரி) தலா 10, உத்திரமேரூர்  (காஞ்சிபுரம்), செய்யூர் (செங்கல்பட்டு) தலா 9, வந்தவாசி (திருவண்ணாமலை), சென்னை நுங்கம்பாக்கம்  தலா 8, ஆரணி (திருவண்ணாமலை), நடுவட்டம் (நீல்கிரிஸ்), சின்னக்கல்லார் (கோவை) தலா 7,  திருப்பத்தூர்  PTO, நாகப்பட்டினம்  தலா 6, மதுராந்தகம் (செங்கல்பட்டு), போலூர் (திருவண்ணாமலை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), புழல் ARG (திருவள்ளூர்) தலா 5, காரைக்கால், அண்ணா யூனிவர்சிட்டி  (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்), கிருஷ்ணகிரி , பாலக்கோடு (தர்மபுரி), திருத்தணி (திருவள்ளூர்) தலா 4, திருக்கோயிலூர் ARG (கள்ளக்குறிச்சி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி  தலா 3. 


Tamilnadu Rain: 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

வங்க கடல் பகுதிகள்:

18.07.2021 முதல் 22.07.2021 வரை: தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19.07.2021 முதல் 22.07.2021 வரை: தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

20.07.2021 முதல் 22.07.2021 வரை: மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

18.07.2021 முதல் 22.07.2021 வரை: கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

18.07.2021 முதல் 22.07.2021 வரை: வடக்கு அரபிக்கடல், தென் மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Los Angeles Wildfires: நரகமாய் மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்..! கட்டுக்கடங்காத காட்டு தீ, உயிர் பயத்தில் மக்கள், முடிவு எங்கே?
Los Angeles Wildfires: நரகமாய் மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்..! கட்டுக்கடங்காத காட்டு தீ, உயிர் பயத்தில் மக்கள், முடிவு எங்கே?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Los Angeles Wildfires: நரகமாய் மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்..! கட்டுக்கடங்காத காட்டு தீ, உயிர் பயத்தில் மக்கள், முடிவு எங்கே?
Los Angeles Wildfires: நரகமாய் மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்..! கட்டுக்கடங்காத காட்டு தீ, உயிர் பயத்தில் மக்கள், முடிவு எங்கே?
பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை; ஏன்? - நிதி நிலைமையை லிஸ்ட் போட்ட அமைச்சர்!
பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை; ஏன்? - நிதி நிலைமையை லிஸ்ட் போட்ட அமைச்சர்!
சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் - சீமானை தாக்கிய கனிமொழி!
சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் - சீமானை தாக்கிய கனிமொழி!
Rasipalan Today January 10:  தனுசுக்கு அமைதி தேவை; மகரத்திற்கு பொறுப்பு அதிகரிக்கும் !
Rasipalan January 10: தனுசுக்கு அமைதி தேவை; மகரத்திற்கு பொறுப்பு அதிகரிக்கும் !
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Embed widget