மேலும் அறிய

Ravindhranath MP: தேனி தொகுதி எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதி எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என  சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது என தீர்ப்பளித்துளித்துள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்  தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத்  76,319 ஓட்டுகள் வித்தியாசத்தில்  எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆனால் அவரது வேட்புமனுவில் , சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை மறைத்ததாக, தேனி தொகுதி வாக்காளராக உள்ள மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அதில் பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக புகார் எழுந்த நிலையில், வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.  ஆனால் தேனி தொகுதியில் பணம் பட்டுவாடா அதிகம் நடந்தும் தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை எனவும் கூறியிருந்தார். அதேசமயம் இது தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், வழக்கை ஏற்கக்கூடாது எனவும் ரவீந்திரநாத் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ரவீந்திரநாத் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. 

தொடர்ந்து மிலானி தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின்போது ஓ.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். மேலும் தேர்தல் அதிகாரிகள் முன்பும் ஆஜராகி ஆவணங்களையும் அளித்திருந்தார். இதனிடையே இந்த வழக்கில் இறுதி விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தீர்ப்பளித்துள்ளார்.

இதன்மூலம் அதிமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கும் பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், ‘கால தாமதம் ஆனாலும் நீதி வென்றுள்ளது’ என கூறியுள்ளார். இதனிடையே ஓ.பி.ரவீந்திரநாத் விடுத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 

School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!

''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி

அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!

பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 

கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ

Embed widget