Urban Local Body Election: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சென்னை - திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு
சென்னை - திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு
சென்னையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் உள்ள 18 45, 72, 107, 135, 190 ஆகிய 6 வார்டுகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 12838 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது . 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலை சந்திக்க உள்ளன. 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 5 வரை பொதுமக்களுக்கும், மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.
தேர்தல் அட்டவணை
வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள் - ஜனவரி 28 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை)
வேட்புமனு தாக்கல் இறுதி நாள் - பிப்ரவரி 4
வேட்பு மனுக்கள் பரிசீலனை - பிப்ரவரி 5
வேட்பு மனு திரும்ப பெருவதற்கான கடைசி தேதி - பிப்ரவரி 7
வாக்கு பதிவு நடைபெறும் தேதி - பிப்ரவரி 19
வாக்கு பதிவு நேரம் - காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் - பிப்ரவரி 22
தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும் நாள் - பிப்ரவரி 24
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நாள் - மார்ச் 2
துணை மேயர், மேயர் பதவிகளுக்கு தேர்தல் - மார்ச் 4ஆம் தேதி
தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுடைய பதவி காலம் முடிவடைந்தும் நீண்ட காலம் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழலில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த 2021ஆம் வருடம் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்