Anbumani Ramadoss: கூலிப்படையை முழுமையாக ஒழிக்க.. பாமக நிர்வாகி கொலையை கண்டித்து அன்புமணி இன்று போராட்டம்
கூலிப்படைகளை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டில் பா.ம.க. தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று அதாவது ஜூலை 11ஆம் தேதி போராட்டம் நடைபெறுகிறது.
கூலிப்படைகளை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டில் பா.ம.க. தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று அதாவது ஜூலை 11ஆம் தேதி போராட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே பா.ம.க. நகர செயலாளர் பூக்கடை நாகராஜ் என்பவர் கூலிப்படையினரால் முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பா.ம.க.வினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நிகழ்ந்துள்ள இக்கொலை அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகிறது.
மறைமலைநகர் பகுதியில் பா.ம.க. நிர்வாகி மனோகரன், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் காட்டூர் காளிதாசன் மற்றும் செங்கல்பட்டில் பூக்கடை நாகராஜ் என கடந்த மே மாதம் 22ஆம் தேதியில் இருந்து இப்போது வரையிலான 50 நாட்களில் பா.ம.க. நிர்வாகிகள் 3 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் லோகேஷ் என்பவர் கொடூரமான முறையில் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்திலும் கூலிப்படையினர் சம்பந்தப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கூலிப்படையினரின் கூடாரமாக மாறி வரும் நிலையில், கூலிப்படையினரின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது.
இதனைக் கண்டித்தும் கூலிப்படையினரை முழுமையாக ஒழிக்கவும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு நகரம் அம்பேத்கர் சிலை அருகில் பா.ம.க. சார்பில் 11-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு மாபெரும் போராட்டம் நடத்தப்படும். அப்போராட் டத்திற்கு பா.ம.க. தலைவரான நானே தலைமையேற்கிறேன்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.