மேலும் அறிய

Rain Alert: அடுத்த 3 மணி நேரம்! தமிழகத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3 மணி நேரம்:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

”1. தென் இந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
2.  கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

06.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

07.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

08.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் புதுச்சேரி,  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

09.11.2023 மற்றும் 10.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

 அரபிக்கடல் பகுதிகள்:  

06.11.2023: லட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

07.11.2023: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

08.11.2023 முதல் 10.11.2023 வரை: மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளை மறுநாள் உருவாகும் புயல்.. தயார் நிலையில் NDRF.. டெல்லியில் முக்கிய மீட்டிங்!
நாளை மறுநாள் உருவாகும் புயல்.. தயார் நிலையில் NDRF.. டெல்லியில் முக்கிய மீட்டிங்!
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு அதிரடி!
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழ்நாடு அரசு அதிரடி!
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்”  - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Manadu : கார் பார்கிங்கில் தேங்கிய மழைநீர்!அடாவடி செய்யும் பவுன்சர்கள் நடக்குமா தவெக மாநாடு?Irfan baby Delivery Video : மீண்டும்..மீண்டுமா?தொப்புள்கொடி வெட்டும் வீடியோ அடுத்த சர்ச்சையில் இர்ஃபான்!Bus Accident : FULL SPEED-ல் வந்த பேருந்து ஒன்றோடு ஓன்று மோதி விபத்து பதறவைக்கும் CCTV காட்சி SalemVijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை மறுநாள் உருவாகும் புயல்.. தயார் நிலையில் NDRF.. டெல்லியில் முக்கிய மீட்டிங்!
நாளை மறுநாள் உருவாகும் புயல்.. தயார் நிலையில் NDRF.. டெல்லியில் முக்கிய மீட்டிங்!
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு அதிரடி!
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழ்நாடு அரசு அதிரடி!
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்”  - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மெரினாவில் ரகளை.. போலீசை தகாத வார்த்தை சொல்லி திட்டிய ஜோடி.. தட்டி தூக்கிய காவல்துறை! 
மெரினாவில் ரகளை.. போலீசை தகாத வார்த்தை சொல்லி திட்டிய ஜோடி.. தட்டி தூக்கிய காவல்துறை! 
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Embed widget