Coonoor Chopper Crash : வெளியானது வீடியோ.. தீப்பற்றி எரியும் ஹெலிகாப்டர்.. இறுதி நிமிட பரபரப்பு காட்சிகள்.!
ஹெலிகாப்டர் கடைசியாக பறந்து சென்ற விபத்துக்குள்ளாகி பற்றி எரியும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது
கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர்.
விபத்தில் சிக்கி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிபின் ராவத்தின் மறைவுக்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பிபின் ராவத்தின் மறைவையடுத்து தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் பிபின் ராவத் பிறந்த மாநிலமான உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கடைசியாக பறந்து சென்ற விபத்துக்குள்ளாகி பற்றி எரியும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
குன்னூர் - நேற்று கீழே விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டர் தீ பிடித்து எரியும் காட்சி...
— ABP Nadu (@abpnadu) December 9, 2021
https://t.co/wupaoCQKa2 | #TamilNaduChopperCrash | #HelicopterCrash | #BibinRawat | #Coonoor pic.twitter.com/tAgLyq1yXs
மேலும் படிக்க..
Next CDS of India: நாட்டின் அடுத்த தலைமைத் தளபதி யார்? - நீடிக்கும் குழப்பம்!
Mi-17 Black Box: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு...
“ஒரு மருத்துவராக... சிகிச்சை பெற்று வரும் விமானி வருணை சந்தித்தேன்” - ஆளுநர் தமிழிசை பேட்டி!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்