மேலும் அறிய

Krishnagiri: கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்.. பிரபல தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

கிருஷ்ணகிரியில் பிரபல நகைக்கடை உரிமையாளர் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரியில் பிரபல நகைக்கடை உரிமையாளர் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜுவல்லரி எனும் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக டி.எம்.சுரேஷ் இருந்து வந்தார். இவரை போன்று இவரது சகோதரர்களும் கிருஷ்ணகிரியில் நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகள் நடத்தி வருகின்றனர். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த டி.எம்.சுரேஷ் கிருஷ்ணகிரி நகர வணிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். இவர் தனது குடும்பத்துடன் காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் இன்று காலை 7 மணியளவில் வழக்கம்போல வீட்டில் உள்ள தனது அறையில் டி.எம்.சுரேஷ் இருந்துள்ளார். அப்போது திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஓடிச்சென்று சுரேஷ் இருந்த அறையில் பார்த்துள்ளனர். அப்போது அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். உடனடியாக கிருஷ்ணகிரி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் தடவியல் துறை வருகை புரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுரேஷ் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் போலீசார் என்ன காரணம் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்துக் கொண்டது குறித்த காரணம் இதுவரை தெரிய வரவில்லை. இரவு வழக்கம்போல குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த சுரேஷ், காலையில் தற்கொலை செய்துக் கொண்டதாக குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு சமீபகாலமாக நிலம் முதலீடு மற்றும் கொடுத்தல் வாங்கல் பிரச்சனை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
 
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மானாமதுரையில் தொடரும் மணல், கிராவல் கொள்ளை: கனிமவளத்துறை அமைச்சர் தலையிடுவாரா?
மானாமதுரையில் தொடரும் மணல், கிராவல் கொள்ளை: கனிமவளத்துறை அமைச்சர் தலையிடுவாரா?
1.25 கிலோ மீன் ₹15,000-ஆ?! கோதாவரி 'புலாசா' மீனுக்கு இப்படியொரு போட்டியா?
1.25 கிலோ மீன் ₹15,000-ஆ?! கோதாவரி 'புலாசா' மீனுக்கு இப்படியொரு போட்டியா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Embed widget