MK Stalin Covid 19: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு கொரோனா:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, இன்று உடற்சோர்வு சற்று இருந்தது, அதை தொடர்ந்து பரிசோதித்ததில் கொரோனா தொற்று #COVID19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) July 12, 2022
அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.
இன்று காலை செம்மஞ்சேரி பகுதியில் மழைநீர் வடிகால் & வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போழுது அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் டுரைமுருகன், அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
முகக்கவசம் அணியவும்:
மேலும், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவல்:
கடந்த ஒரு வாரமாக, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்