Breaking LIVE : வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றால் 270 நாட்களுக்கு விடுமுறை
தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
LIVE
Background
தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூ மாவட்டடதில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
அதேபோல், மயிலாடுதுறையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், ஈக்காட்டுத்தாங்கல், ஆயிரம் விளக்கு, ஆலந்தூர், விமானநிலையம், குரோம்பேட்டை, கொளத்தூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றால் 270 நாட்களுக்கு விடுமுறை
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றால் 270 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Breaking Live: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : 4 காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய 4 காவல்துறை அதிகாரிகளை டி.ஜி.பி. சைலேந்திர பாபு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Breaking live: ஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். கழிவுநீர் தொட்டியிலிருந்து சடலங்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Breaking live: ஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். கழிவுநீர் தொட்டியிலிருந்து சடலங்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.