மேலும் அறிய

Book Fair: அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி; ரூ.4.96 கோடி நிதி ஒதுக்கீடு-  குழு அமைப்பு

சென்னையைப் போல் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்த ரூ.4.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையைப் போல் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்த ரூ.4.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்தகக் காட்சி நடத்த பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

சட்டப்‌பேரவையில்‌ 2022- 2023ஆம்‌ ஆண்டிற்கான பொது வரவு செலவுத் திட்டத்தின்‌போது நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்‌ துறை அமைச்சரால்‌ 18.03.2022 அன்று இன்ன பிறவற்றுடன்‌ கீழ்க்காணும்‌ அறிவிப்பும்‌ வெளியிடப்பட்டுள்ளது:

 சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில்‌ புத்தக வாசிப்பு முக்கியப்‌ பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பை ஒரு மக்கள்‌ இயக்கமாக எடுத்துச்‌ செல்ல, சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ புத்தகக்‌ காட்சிகள்‌ நடத்தப்படும்‌. இத்துடன்‌ இலக்கியச்‌ செழுமை மிக்க தமிழ்மொழியின்‌ இலக்கிய மரபுகளைக்‌ கொண்டாடும்‌ வகையில்‌, ஆண்டுக்கு நான்கு இலக்கியத்‌ திருவிழாக்கள்‌
நடத்தப்படும்‌. புத்தகக்‌ காட்சிகள்‌ மற்றும்‌ இலக்கியத்‌ திருவிழாக்கள்‌ வரும்‌ ஆண்டில்‌ 5.6 கோடி ரூபாய்‌ செலவில்‌ நடத்தப்படும்‌.

மேற்காணும்‌ அறிவிப்பினை செயல்படுத்தும்‌ பொருட்டு, பொது நூலக இயக்குநர்‌ தனது கடிதங்களில்‌ கீழ்க்காணும்‌ விவரங்களை தெரிவித்துள்ளார்‌.

தமிழகம்‌ முழுவதும்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ புத்தகக்காட்சி நடத்தும்‌ பொருட்டு, மாவட்டங்களை மூன்று வகையாக பிரித்து (வகை A, B & C) அதில்‌ A வகை மாவட்டங்களுக்கு மானியமாகத் தலா ரூ.17.5 லட்சமும் B வகை மாவட்டங்களுக்கு மானியமாகத் தலா ரூ.14 லட்சமும் C வகை மாவட்டங்களுக்கு மானியமாகத் தலா ரூ.12 லட்சமும்  மொத்தம் ரூ.4.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Book Fair: அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி; ரூ.4.96 கோடி நிதி ஒதுக்கீடு-  குழு அமைப்பு

மாநில ஒருங்கிணைப்புக்‌ குழுவின்‌ பணிகள்‌ பின்வருமாறு:-

பதிப்பாளர்கள்‌ மற்றும்‌ புத்தக விற்பனையாளர்கள்‌ சார்ந்த பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்து மாநிலம்‌ முழுவதும்‌ புத்தகக்‌ காட்சி நடத்துவதற்கான கால அட்டவணை தயார்‌ செய்தல்‌.

மாவட்ட ஒருங்கிணைப்புக்‌ குழுவினரோடு இணைந்து புத்தகக்‌காட்சி நடத்துவதற்கான ஆலோசனைகளையும்‌ வழிகாட்டுதல்களையும்‌ வழங்குதல்‌.

மாநில அளவில்‌ புத்தகக்‌ காட்சி ஒருங்கிணைப்பு மற்றும்‌ கண்காணிப்புப்‌ பணிகளை மேற்கொள்ளுதல்‌.

நிதி மற்றும்‌ செலவினங்களை ஒருங்கிணைத்து கண்காணித்தல்‌.

புத்தகக்‌ காட்சி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தல்‌.

மேலும்‌, மாவட்டங்களில்‌ நடைபெறும்‌ புத்தகக்‌ காட்சிகளை ஒருங்கிணைத்து நடத்துவதற்காக மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ தலைமையில்‌ மாவட்ட ஒருங்கிணைப்புக்‌ குழு அமைக்கப்படும்‌ என்றும்‌, இக்குழுவின்‌ உறுப்பினர்‌ செயலரை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ நியமித்துக்‌ கொள்வார்‌ என்றும்‌, பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌, எழுத்தாளர்கள்‌, புத்தக வாசிப்பு ஆர்வலர்கள்‌, சமூக ஆர்வலர்கள்‌, பதிப்பகம்‌ சார்ந்த பிரதிநிதிகள்‌, நூலகர்கள்‌, நூலக வாசகர்‌ வட்டம்‌ ஆகியோரை உறுப்பினர்களாகக்‌ கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்புக்‌ குழு அமைக்கப்படும்‌ எனத்‌ தெரிவித்துள்ளார்‌.

மாவட்ட ஒருங்கிணைப்புக்‌ குழுவின்‌ பணிகள்‌ பின்வருமாறு:

ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ புத்தகக்‌ காட்சி நடத்துவதற்கு மாவட்டத்தின்‌ மையப்பகுதியில்‌ போதுமான இடவசதியுள்ள காலியான மைதானத்தை தேர்வு செய்தல்‌,

மாநில ஒருங்கிணைப்பு குழுவுடன்‌ இணைந்து மாவட்டங்களில்‌ புத்தகக்‌ காட்சியினை நடத்துதல்‌.

புத்தகக்‌ காட்சி நடத்துவதற்கு மாநில ஒருங்கிணைப்புக்‌ குழு அளிக்கும்‌ கால அட்டவணையிணை, மாவட்ட நிர்வாகத்துடன்‌ ஆலோசித்து உள்ளூரில்‌ நடக்கும்‌ பல்வேறு நிகழ்ச்சிகளின்‌ அடிப்படையில்‌ புத்தகக்‌ காட்சி நடத்த வேண்டிய நாட்களை தேர்வு செய்தல்‌.

புத்தகக்‌ காட்சி நடைபெறும்‌ வளாகத்தில்‌, பொதுமக்கள்‌ எளிதாக வந்து செல்லும்‌ வகையில்‌ வடிவமைத்தல்‌.

புத்தகக்‌ காட்சி நடைபெறும்‌ அரங்கங்களின்‌ எண்ணிக்கையினைப் பொறுத்து, இப்புத்தகக்‌ காட்சியினை உள்ளரங்குகளில்‌ நடத்துதல்‌.

புத்தகக்‌ காட்சி நடத்துவதற்கான பணிகளை வரிசைப்படுத்தி அவற்றிற்கான உட்குழுக்களை அமைத்து, அதன்‌ பணிகளை ஒருங்கிணைத்து கண்காணித்தல்‌.

புத்தகக்‌ காட்சி மற்றும்‌ அதனைச்‌ சார்ந்து நடைபெறும்‌ கலை நிகழ்ச்சிகள்‌, மற்றும்‌ பிற இலக்கியம்‌ சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வல்லுநர்கள்‌, கலைஞர்கள்‌ மற்றும்‌ எழுத்தாளர்களைத் தேர்வு செய்தல்‌ மற்றும்‌ நிகழ்ச்சி நிரலினைத் தயார்‌ செய்தல்‌ போன்ற பணிகளை மேற்கொள்ளுதல்‌.

புத்தகக் காட்சி நடத்துவதற்கான நிதி ஆதாரங்களை அரசு மானியம்‌, கொடையாளர்களிடமிருந்து பெறப்படும்‌ நிதி, விளம்பரதாரர்‌ மூலம்‌ பெறப்படும்‌ நிதி ஆகியவை மூலம்‌ நிதி திரட்டும்‌ பணிகளை மேற்கொள்ளுதல்‌.

புத்தகக்‌ காட்சிக்காக பயன்படுத்த இயலும்‌ அரசின்‌ பிற துறை நிதியினையும்‌ கண்டறிந்து பயன்படுத்துதல்‌.

நிதி மேலாண்மைக்கான குழு அமைத்து தனியாக வங்கிக்‌ கணக்கு ஆரம்பித்து அதன்‌ மூலம்‌ சிக்கனமாகவும்‌, சிறப்பாகவும்‌ நிதியினை கையாளுதல்‌.

வரவு செலவு கணக்குகளை நிர்வகித்தல்‌.

பொது மக்கள்‌ மற்றும்‌ மாணவர்களிடம்‌ புத்தகக்‌ காட்சி தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துதல்‌. மேலும்‌, மாணவர்கள்‌ புத்தகக்‌ காட்சியில்‌, புத்தகம்‌ வாங்க பணம்‌ சேமிக்கும்‌ திட்டத்தினை ஊக்குவித்தல்‌.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
Embed widget