மேலும் அறிய
Advertisement
‛நான் சொல்பவரை தான் நியமிக்கணும்.... இல்ல... கம்யூட்டர் இருக்காது’ போலீஸ் முன் மிரட்டிய பாஜக நிர்வாகி!
ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகளுக்கு பாஜக ஓபிசி அணி மாநில துணை தலைவர் மிரட்டல் விடுக்கும் விதமாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிகாரத்தையும், உரிமையையும் பறிப்பதாக கூறி சீர்காழி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்புத் தலைவரும், ஊராட்சி ஒன்றிய தலைவரும், பாஜக ஓபிசி அணி மாநில துணை தலைவருமான அகோரம் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் 15 வது நிதி மானிய குழு அந்தந்த ஊராட்சிகளுக்கு 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் 15 வது மானிய நிதியை கிராம ஊராட்சியின் வளர்ச்சியை தவிர வேறு எந்த திட்டத்திற்கும் ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதியின்றி வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை இன்றைய மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதியத்தை தனியாக நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும். ஊராட்சி மன்ற செயலர்கள் ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதி மற்றும் ஆலோசனை இல்லாமல் புதிய செயலர்கள் பணிநியமனம் பணியிட மாறுதல் செய்ய கூடாது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்களை பணி நிரந்தரமாக்கி அவர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய போதிய சரியான நிதியை சில ஊராட்சிகளுக்கு திட்டமிட்டு வழங்கப்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது. இந்த போக்கை நீக்க வேண்டும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா மருத்துவ தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பு முகாம் மற்ற செலவுகள் அனைத்தையும் கிராம ஊராட்சி கணக்கு எண் ஒன்றில் இருந்து செய்து வருகிறோம். அரசு இதுவரை எந்த நிதியையும் எந்த ஊராட்சிக்கும் வழங்கப்படவில்லை. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கை என்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். அரசு வழிகாட்டுதல் நெறிமுறையின் அடிப்படையில் பணித்தள பொறுப்பாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.
இதில் பேசிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவரும், ராதாநல்லூர் ஊராட்சி தலைவரும், பாஜக ஓபிசி அணி மாநில துணை தலைவருமான அகோரம் பேசுகையில், ஊராட்சி பணித்தள பொறுப்பாளர்களுக்கு வழங்கப்படும் நிதி மத்திய அரசு உடையது என்பதால், பணித்தள பொறுப்பாளர்களை பாஜக ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய நான் கூறும் நபர்களுக்கே வழங்க வேண்டும், அவ்வாறு இல்லாமல் படித்தாள் பொறுப்பாளர்களை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பதிவு செய்தால் அவர்களும் அதனை பதிவு செய்யும் கணினியும் கூட இருக்க முடியாது என காவலர்கள் முன்னிலையில் பகிரங்க மிரட்டல் விடுத்த சம்பவம் அங்கு பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவதூறாக பேசியதாக கைதானது குறிப்பிட்டதக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
க்ரைம்
தொழில்நுட்பம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion