மேலும் அறிய

ISI தரச்சான்றிதழ் இல்லாத பொம்மைகள் பறிமுதல்.. பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை..

சென்னை விமான நிலையத்தில் உள்ள பொம்மைக் கடையில் பிஐஎஸ் அதிகாரிகள் நேற்று இரவு அதிரடிச் சோதனை - ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் உள்ள பொம்மைக் கடையில் பிஐஎஸ் அதிகாரிகள் நேற்று இரவு அதிரடிச் சோதனை - ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்திய தர நிர்ணய அமைப்பு, சென்னை அலுவலக அதிகாரிகள் குழு நேற்று இரவு சென்னை T1 உள்நாட்டு விமான நிலையத்தில் அமைந்துள்ள M/s Tiara Toys Zone, TiaraTrading Company இல் BIS சட்டம்,2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், அமலாக்கச் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ISI தரச்சான்றிதழ் இல்லாத பொம்மைகள் பறிமுதல்.. பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை..

இந்த சோதனையின்போது, இந்திய தர நிர்ணய அமைப்பின்  சட்டம் 2016 பிரிவு 28 இன் படி, கடைகளில் பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாமல் பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாத மொத்தம் 327 பொம்மைகள் (198 மின்சாரம் அல்லாத பொம்மைகள் மற்றும் 129 எலக்ட்ரிக் பொம்மைகள்) பறிமுதல் செய்யப்பட்டன. 

அரசால் வெளியிடப்பட்ட பொம்மைகள் (தரக்கட்டுப்பாடு) ஆணை, 2020ன் படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இறக்குமதி செய்யப்பட்ட, விநியோகிக்கப்பட்ட, விற்கப்படும், வாடகைக்கு எடுக்கப்பட்ட, குத்தகைக்கு விடப்பட்ட, சேமித்து வைக்கப்பட்ட அல்லது விற்பனைக்காகக் காட்டப்படும் அனைத்து பொம்மைகளும் BIS ஆல் கட்டாயமாக தரச் சான்றளிக்கப்பட்டு BIS ஸ்டாண்டர்ட் மார்க் பெற்றிருக்க வேண்டும். எனவே, இந்த கடை  பொம்மைகள் (தரக் கட்டுப்பாடு) ஆணை,2020ஐ மீறியதன் மூலம்,BIS சட்டம் 2016 இன் பிரிவு 16 மற்றும் 17ஐ மீறியுள்ளார்.

ISI தரச்சான்றிதழ் இல்லாத பொம்மைகள் பறிமுதல்.. பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை..

இந்திய தர நிர்ணய அமைப்பு, சென்னை கிளை அலுவலகம் I, இந்திய தர நிர்ணயச் சட்டம்,2016-ன் கீழ் தரச்சான்றிதழ் இல்லாமல் பொம்மைகள் விற்பனை செய்ததை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்திற்கு, முதல் மீறலுக்கு BIS சட்டம், 2016 இன் பிரிவு 29 இன் படி, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.2,00,000/- இற்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்.

ISI தரச்சான்றிதழ் இல்லாத பொம்மைகள் பறிமுதல்.. பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை..

எனவே, பொது மக்கள், எவரேனும் ஐஎஸ்ஐ முத்திரையைத் தவறாகப் பயன்படுத்துவது தெரிந்தால் ,பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600 113 என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம். BIS Care செயலியைப் பயன்படுத்தியோ அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். அத்தகைய தகவல் அளித்தவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். BIS இணையதளம் www.bis.gov.in மற்றும் e-BIS (manakonline.in) ஆகியவை BIS பற்றிய பொதுவான தகவல்களுக்கு உங்களுக்கு உதவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
"நியூ இயர் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது" கறாராக சொன்ன டி.கே. சிவகுமார்!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Embed widget